உள்ளூர்

அடக்கியாளப்படும் ஆனையிறவு உப்பள தெரிழலாளர்களின் தொடர் போராட்டமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடும் பதிவு

  • May 23, 2025
  • 0 Comments

ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி நேற்று (22-05) 9 வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் 22ஆம் திகதி வியாழக்கிழமை மாலை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்று முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்,குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் நான்கு பேர் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பல்வேறு பிரச்சனைகளை முன் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழப்பாணத்தில் தங்கையை கடத்திய அண்ணனுக்கு வலை வீசியுள்ள பொலிஸார்

  • May 22, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்று (21-05) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர். பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர். இதன்போது அங்கு […]

உள்ளூர்

முல்லைத்தீவு விபத்தில் 8 வயதுடைய பாடசாலை மாணவி பலி

  • May 21, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு, கர்நாட்டுக்கேணி பகுதியில் பாடசாலைக்கு சென்ற சிறுமி மீது பட்டா ரக வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருநாட்டுகேணி பகுதியில் இன்று காலை 7 மணியளவில் பாடசாலைக்கு செல்லும் வழியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவி வீதிக்கு மறுபக்கத்தில் சென்று கொண்டிருந்த பணிஷ் வாகனத்தில் பணிஷ் ஒன்றை வாங்கிவிட்டு திரும்பி சென்றபோது கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பட்டாரக வாகனம் மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. […]

உள்ளூர்

வவுனியா சிறையில் சிறை காலர்கள் யாழ்ப்பாண கைதி மீது கொலைவெறி தாக்குதல்

  • May 20, 2025
  • 0 Comments

வவுனியா சிறைச்சாலையில் கைதி மீது சிறைக்காவலர்கள் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக கைதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சிறைக்காவலர்களின் தாக்குதலில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியை சேர்ந்த சிவபாலன் லக்சன் என தெரியவருகிறது. படுகாயமடைந்த சிறைக்கைதி வவுனியா பொது வைத்தியசாலையின்; அதிதீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 15-05-2025 தொடக்கம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறைக்கைதியின் உறவினர்களால் நேற்று (19-05) வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மறை மாவட்ட ஓய்வு பெற்ற ஆயர் நிரந்தரமாக இளைப்பாறினார்

  • May 19, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை இன்று இறைவனடி சேர்ந்துள்ளதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது. இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று 74 வது வயதில் இறையடி சேர்ந்துள்ளார். கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, தன்னாமுனை என்ற ஊரில் 1952 ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி பிறந்துள்ளார். அன்னார் புனித வளனார் சிறிய குருமடத்திலும், திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் சேற்றில் விழுந்த இளைஞர் மர்மமான நிலையில் உயிரிழப்பு

  • May 19, 2025
  • 0 Comments

யாழில் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் மது போதையில் சேற்றில் விழுந்து உயிரிழந்ததாக தெரியவருகின்றது கே.கே.எஸ். வீதி வண்ணார் பண்ணையைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி இளைஞரின் வீட்டார் மட்டக்களப்புக்கு சென்ற நிலையில் சகோதரன் ஒருவர் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை (17-05) வீட்டில் மது விருந்து நடைபெற்று முடிந்த நிலையில் வெளியில் சென்ற இளைஞர் சேற்றில் விழுந்து உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கஜேந்திரகுமாiர் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்

  • May 14, 2025
  • 0 Comments

உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆட்சி அதிகாரத்தினை கூட்டிணைந்து அமைத்துக்கொள்வது தொடர்பில் பேச்சுக்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நேரில் சந்திப்பதற்கு ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது. அத்துடன் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் கொள்கை அடிப்படையிலான கூட்டு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பரஸ்பரம் தெளிவு படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு அப்பால் கொள்கை அளவில் கூட்டிணைய வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம் வலியுறுத்தியுள்ளமை தொடர்பில் கருத்து […]

உள்ளூர்

யாழில் போதைக்கு அடிமையான இளம் குடும்பஸ்த்தர் தற்கொலை

  • May 9, 2025
  • 0 Comments

யாழில் போதைப்பொருள் பாவிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் நேற்று (08-05) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அராலி – வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் 33 வயதுடைய வசந்தகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று (08-05) காலை இவ்வாறு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு மனைவி, தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் மனவிரக்தியடைந்த குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அவரது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் றெக்டரில்; சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்

  • May 8, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தினுள் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று இரவு தனது உழவு இயந்திரத்தின் கீழே இறங்கி நின்றவாறு திறப்பினை இயங்க செய்துள்ளார். இதன்போது கியர் இயக்கத்தில் இருந்த உழவு இயந்திரம் திடீரென இயங்க ஆரம்பித்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் கீழே விழுந்ததால் அவர்மீது உழவு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் அமைதியான முறையில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்

  • May 6, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 55 ஆயிரத்து 520 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 447 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு) மிக அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது. இதன்படி, பல்வேறு வாக்களிப்பு நிலையங்களிலும் வேட்பாளர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கும் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். செங்கலடியில் தமிழரசுக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் ஊடகவியலாளர் எஸ்.நிலாந்தன் வாக்களித்ததுடன் மட்டக்களப்பு ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் இ.சிறிநாத் ஆகியோர் தமது வாக்குகளை பதிவுசெய்தனர். இதேபோன்று ஆரையம்பதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் […]