உள்ளூர் முக்கிய செய்திகள்

வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்த யாழ் யுவதி வேறொரு ஆணுடன் ஓட்டம் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு

  • April 9, 2025
  • 0 Comments

யாழில் .பிரான்ஸ் வாழ் புலம்பெயர் இளைஞன் ஒருவரை திருமணம் முடிந்த சில நாட்களில் திருமணப் பெண், வேறு ஒருவருடன் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பிரான்ஸ் இருந்து சென்ற மணமகனுக்கும் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் யுவதி ஒருவருக்கும் அண்மையில் யாழில் திருமணம் இடம்பெற்றது. இந்நிலையில் திருமணம் முடிந்த சில நாளில் பதிவுத் திருமணம் இடம்பெற இருந்த நிலையில் ஏற்கனவே திருமணம் செய்த ஆண் ஒருவருடன் புது மணப்பெண் தலை மறைவாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மணமகன் […]

உள்ளூர்

யாழ். பல்கலை 4ம் வருட சட்டத்துறை மாணவனுக்கு அடிபணிந்த யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்

  • April 8, 2025
  • 0 Comments

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரால் நான்காம் வருட சட்டத்துறை மாணவர் ஒருவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு மீளப் பெறப்பட்டு விசாரணைச் செயன்முறைகள் கைவிடப்பட்டமைக்கு பல்கலைக்கழக மட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை சட்ட நியமனங்களுக்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிட்டு அந்த மாணவனின் தரப்பில் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, அவருக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை மீளப்பெறப்பட்டதுடன், அதன் தொடர்ச்சியாக விசாரணைச் செயன்முறைகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது மாணவன் மீதான குற்றச்சாட்டுப் […]

உள்ளூர்

குருணாகல், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ : நால்வர் உயிரிழப்பு,

  • April 8, 2025
  • 0 Comments

குருணாகல், வெஹெகர சந்திப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த தீ பரவலில் சிக்கி மேலும் 4 பேர் காயமடைந்துள்ள நிலையில், சிகிச்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்றிவு இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் குருணாகல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் மனைவியும் மகளும் வேலைக்கு போனதால் குடும்பஸ்த்தர் தற்கொலை

  • April 2, 2025
  • 0 Comments

தனது பேச்சினை மீறி மனைவியும் மகளும் வேலைக்கு செல்ல முற்பட்டதால் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயைச் சேர்ந்த 45 வயதுடைய ஐயாத்துரை புலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி மகளும் மனைவியும் வேலைக்கு செல்ல முற்பட்டவேளை குறித்த குடும்பஸ்தர் தனக்கு தானே பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இந்நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

உள்ளூர்

தாய்க்கு கடிதம் எழுதிவிட்டு 31 வது மாடியிலிருந்து விழுந்த இளைஞர் மரணம். கொழும்பில் சம்பவம்

  • March 31, 2025
  • 0 Comments

கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் அந்த ஹோட்டலில் அறையில் ஒன்றில் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அவர் உயிரிழப்பதற்கு முன்பு எழுதிய ஒரு கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ; அதில், ‘மன்னிக்கவும், அம்மா, நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். நான் தினமும் நினைத்து வேதனைப்படுகிறேன்’ என அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. கொழும்பில் ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்த இளைஞர் மரணம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாமென யாழ். பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

  • March 29, 2025
  • 0 Comments

இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாம் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவானது அண்மித்த காலப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இலங்கையின் கீழாகவும் இலங்கைக்கு அண்மித்ததாகவும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகள் பதிவாகி வருகின்றது. எனினும் இதுவரை இவை சேதங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் என்றோ ஒருநாள் இலங்கையிலும் […]

உள்ளூர்

ஆனையிறவு உப்பளத்தில் இன்று உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது

  • March 29, 2025
  • 0 Comments

கடந்த நாட்களில் நிலவிய உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் கைத்தொழில் அமைச்சின் கீழ் உப்பு உற்பத்தியொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கடந்த சில வாரங்களாக அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது. அதன் பிரகாரம், நாளை தொடக்கம் ஆனையிறவு உப்பளத்தில் ‘ரஜலுணு’ என்ற பெயரில் குறித்த உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது. கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்ளூர்

அவுஸ்திரேலியாவை சேர்ந்த யாழ்ப்பாணத்தவர் மட்டக்களப்பில் உயிரிழப்பு

  • March 27, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 71 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த நபர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து வருகைதந்து மட்டக்களப்பு மாமாங்கத்தில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த நிலையில்இ நேற்றிரவு நித்திரை கொள்ள படுக்கையறைக்குச் சென்றவர் அதிகாலையில் நித்திரை விட்டெழவில்லை எனவும் அவரை எழுப்ப முற்பட்டபோதே அவர் உயிரிழந்தமை தெரியவந்தது எனவும் பொலிஸாருக்கு சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் நீதிமன்ற அனுமதியை பெற்றதையடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலம் […]

உள்ளூர்

மட்டக்களப்பில் மாடு திருடிய இளைஞனை மக்கள் அடித்தே கொன்றுள்ளனர்

  • March 26, 2025
  • 0 Comments

அண்மையில் மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் மாடுகளை திருடிய இளைஞன் பொதுமக்களால் மடக்கிப் பிடித்து தாக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (25-03) அதிகாலை உயிரிழந்துள்ளார் கடந்த 15ஆம் திகதி வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புதுமண்டபத்தடி பிரதேசத்தில் மாட்டினை திருடியபோது இந்த இளைஞனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தாக்கி, அந்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து, அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டது. அதையடுத்து, அவரை […]

உள்ளூர்

இலங்கை இந்திய அரசுகள் பேச வேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னராசா தெரிவித்தார்.

  • March 26, 2025
  • 0 Comments

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரச மட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டவேண்டும் என்று வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னராசா தெரிவித்தார். இலங்கை – இந்திய மீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது. அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அன்னராசா இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 2016ஆம் […]