பிரிட்டனின் தடையால் பதறும் சிறிலங்கா கல்விச் சமூகம்
நாட்டின் முன்னாள் பாதுகாப்பு படையினருக்கு எதிராக விதிக்கப்படும் தடையானது வருங்காலத்தில் நாட்டுக்கு எதிரானதாகக் கூட மாற்றமடையலாம். எனவே, அரசாங்கம் இது தொடர்பில் தீவிரமாக கரிசணை செலுத்த வேண்டும். மியன்மார், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் நிலையில், எதற்காக இலங்கை மாத்திரம் இலக்கு வைக்கப்படுகிறது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வணிக சட்டப்பிரிவின் பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார். கொழும்பில் நேற்று (25-03) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். […]