உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்குண்ட 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்

  • March 4, 2025
  • 0 Comments

உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் யாழ். உடுவில் கற்பமுனைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று (03-02-2025) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டிலிருந்து உழவு இயந்திரத்தை பின் பக்கமாக வெளியே எடுக்க முயன்றுள்ளார். இதன்போது, உழவு இயந்திரத்தின் பின்னால் இருந்த சிறுவன் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். சிறுவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் காவல்நிலையக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவில் வடை வாங்கினால் சட்டை ஊசி இலவசம். புதிய ஒப்பர்

  • March 4, 2025
  • 0 Comments

வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடை ஒன்றிற்குள் சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது. வவுனியா, பழைய பேரூந்து நிலையத்துக்கு அருகில் சைவ உணவகம் ஒன்றிற்கு நேற்று (03-03-2025) சென்ற ஒருவர் அங்கு வடையினை கொள்வனவு செய்துள்ளார். குறித்த வடையை வீட்டில் சென்று சாப்பிட்ட போது அவ் வடைக்குள் பெரிய சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த வடையை அதன் முகாமையாளரிடம் காட்டி ஊசி காணப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டது. தவறுதலாக இடம்பெற்றுள்ளதாகவும், இனிவரும் காலத்தில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி சபை தேர்தலில் மணியின் மான் தனித்தே ஓடும்

  • March 2, 2025
  • 0 Comments

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து தனது மான் சின்னத்தில் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். சங்கு சின்னத்தில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் கட்சிகளின் பேச்சில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணி தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மே முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்நிலையில் ஈழமக்கள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ் வடமராட்சி கிழக்கில ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியை ஆட்டய போட்ட பக்தன்

  • March 2, 2025
  • 0 Comments

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பிலிப்பு நேரியார் ஆலயத்தில் காணிக்கை உண்டியல் நேற்று (01-03-2025 ) திருடப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்றிருந்த மக்கள் குறித்த காணிக்கை உண்டியல் பெட்டி ஆலயத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் தொடர்பாக பங்குத்தந்தை மற்றும் ஆலய அருட்பணிச் சபையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ் பருத்தித்துறையில் துப்பாக்கி சூடு ; ஒருவர் காயம் ; மற்றுமொருவர் தப்பியோட்டம்

  • March 2, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் ரக வாகனம் மீது இன்று பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் , மற்றுமொருவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் ஒன்றினை பொலிஸார் மறித்த போது , பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனத்தை சாரதி தொடர்ந்து செலுத்தி செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் செம்பியன்பற்றில் இரவோடிரலாக ஜேசிபியால் க காடழித்த வித்துவான்

  • March 1, 2025
  • 0 Comments

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் இயந்திரம் மூலம் இரவோடு இரவாக பெருமளவான காடு அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (28-02-2025) இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குறிப்பிட்ட நிலப்பகுதியை தனிப்பட்ட தேவைகளுக்காக குத்தகை அடிப்படையில் பெற, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக ஆவன செய்துள்ளார். ஆவண கடிதத்தை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரிடம் கையளித்தவுடன் காடுகள் நிறைந்த சம்பந்தப்பட்ட பெருமளவான […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ரெலோ,புளொட்,ஈபிஆர்எல்எப் தமிழரசு மீண்டும் கூட்டமைப்பாக இயங்க வேண்டும். சி.வீ.கே.சிவஞானம்

  • March 1, 2025
  • 0 Comments

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் ஆகியோருக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில், நடைபெற உள்ள […]

யாழ் போதனா வைத்தியசாலை வழமைக்கு திரும்பியது

  • March 1, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கிளினிக் சேவைகள் இன்று முதல் வழமை போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தமது தொழிற்சங்க நடவடிக்கை நேற்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுத்திருந்தனர். இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்க முகங்கொடுத்திருந்த நிலையில் நோயாளர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கமைய, வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மக்கள் நலன் கருதி கிளினிக் சேவைகளை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முல்லைதீவில் நடமாடும் கசிப்பு பார் நடத்திய 21 வயதுடைய இருவர் கைது

  • March 1, 2025
  • 0 Comments

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனை செய்த இரண்டு இளைஞர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று (28-02-2025) கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்த போது இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசுவமடு பகுதியை சேர்ந்த 21, 26 வயதுடைய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புகள் தொடர்புடைய வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது

  • February 27, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளைய நடைபெறவுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டன அதனை அடுத்து அத்திவாரம் வெட்டும் பணியை ஒப்பந்தக்காரர் நிறுத்தி இருந்தனர். இந்நிலையில் குறித்த பகுதியில் மேலும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் இருக்கலாம் என்றும் , அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அரியாலை பகுதியை சேர்ந்த இருவர் யாழ்ப்பாண […]