உள்ளூர் முக்கிய செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக அன்னலிங்கம் பிரேமசங்கர் பதவி உயர்வு பெற்றுள்ளார்

  • March 17, 2025
  • 0 Comments

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்றதை அடுத்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினரால் கௌரவிக்கப்பட்டார். கௌரவிப்பு நிகழ்வு சனிக்கிழமை (15-03) திருகோணமலையில் இடம் பெற்றது. குறித்த பதவி உயர்வினை ஜனாதிபதியால் கடந்த செவ்வாய்க்கிழமை (11-03) வழங்கப்பட்டிருந்தது. குறித்த கௌரவிப்பு நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், ஏ.டபிள்யூ அப்துல் சத்தார் உட்பட சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டனர்.  

முக்கிய செய்திகள்

வடக்கு மாகாணம் உட்பட பல மாகாங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

  • March 16, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அநுராதபுர மாவட்டத்திலும் இன்றுஇடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.  

உள்ளூர் முக்கிய செய்திகள்

வெளிநாட்டு விசாரணை பொறிமுறைக்கு அரசாங்கம் ஏன்? அஞ்சுகின்றது என கஜேந்திரகுமார் கேள்வி

  • March 16, 2025
  • 0 Comments

நாட்டில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமாயின் உண்மைகள் ஆராயப்பட வேண்டும். அந்த நடவடிக்கை நம்பகத்தன்மையானதாக இருக்க வேண்டும். மஹிந்தவின் ஆட்சியில் மக்கள் விடுதலை முன்னணி இராணுவ தீர்வை தீவிரமாக ஆதரித்தது. அவ்வாறான நிலையில் உண்மையில் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் செயன்முறைக்கு ஆதரவளிக்குமா? என்ற சந்தேகம் காணப்படுகிறது. கடந்த கால அரசாங்கங்களின் போக்கில் இருந்து அரசாங்கம் விடுபட வேண்டு மென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை – ரணில் நிராகரித்துள்ளார்

  • March 16, 2025
  • 0 Comments

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை தான் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார். 1987 -89 இல் ஜேவிபியின் கிளர்ச்சி உச்சகட்டத்தில் இருந்தவேளை பியகமவில் காணப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான முக்கிய நிறுவனங்களிற்கு பாதுகாப்பை வழங்கிய பாதுகாப்பு படையினருக்கு தங்குமிடங்களை வழங்குமாறு அப்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த ரஞ்சன் விஜயரட்ண எனக்கு விடுத்த உத்தரவை நான் நடைமுறைப்படுத்தியது குறித்தே பட்டலந்த ஆணைக்குழு என்னிடம் கேள்வி எழுப்பியுள்ளது என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஏப்ரல் 21 வரை அரசுக்கு கால அவகாசம் தவறினால் வீதிக்கு இறங்க தயங்கமாட்டோம்- பேராயர்

  • March 16, 2025
  • 0 Comments

இலங்கையிலுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கிலேயே தற்போதுள்ள ஆட்சியாளர்களை ஆட்சிபீடத்துக்கு ஏற்றினோம். ஆனால் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்தாமலும் எமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும் இருந்து வந்தால் நாம் மீண்டும் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படுமென கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தற்போதுள்ள அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். அத்துடன், லசந்த விக்ரமதுங்க கொலை, பிரதீப் எக்னெலியகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீய்த் நொயர் தாக்கப்பட்டமை உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்ட […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்

  • March 6, 2025
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றால் மேர்வின் சில்வா நேற்று இரவு (05- 03-2025) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொட பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளுக்காக அவர் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாதாள உலக குழு தலைவரான ‘மிதிகம ருவனுக்கு’ விளக்கமறியல் நீடிப்பு

  • March 5, 2025
  • 0 Comments

பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான ‘மிதிகம ருவன்’ என்று அழைக்கப்படும் ஜயசேகர விதானகே ருவன் சாமர என்பவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுல் லங்காபுர இன்று உத்தரவிட்டுள்ளார். ‘மிதிகம ருவன்’ என்பவர் இன்றைய தினம் ஸ்கைப் காணொளி அழைப்பு ஊடாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘மிதிகம ருவன்’ என்பவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த 79 வயதுடைய தாயொருவர் உயிரிழந்துள்ளார்

  • March 5, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில், மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த வயோதிப பெண் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்த வேளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த 79 வயதுடைய வயோதிப பெண்ணே உயிரிழந்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வயோதிப பெண், கோப்பாய் அஞ்சல் அலுவலகத்தில் உதவி தொகை பெறுவதற்காக கடந்த மாதம் 17ம் திகதி சென்றுள்ளார். உதவி தொகை பெற்ற பின் நடந்து வீடு திரும்பி கொண்டிருந்த வேளை பெண்ணொருவர், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழ் மக்களின் விடயத்தில் அநுர அரசாங்கத்திற்கும் முன்னைய அரசாங்கங்களுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை- ஜோசப் ஸ்டாலின்

  • March 5, 2025
  • 0 Comments

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த கால அரசுகளைப் போன்று அனுர அரசும் ஏமாற்றும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். வட மராட்சிக்கு நேற்று (04-03-2025) விஜயம் மேற்கொண்ட இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நீதிமன்ற கொலை சந்தேக நபரான செவ்வந்தி பற்றி தகவல் தருவோருக்கு 12 இலட்சம் சன்மானம்

  • March 5, 2025
  • 0 Comments

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’வின் கொலையுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபரைக் கைது செய்வதற்கு தகவல் வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் பெண் சந்தேகநபர் தலை மறைவாகியுள்ளார். அவரை கைது செய்வதற்கு உண்மையான தகவல்களை பொதுமக்களை வழங்குமாறு கோரி பொலிஸ் […]