மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலத்தினை அரசாங்கம் முன்வைக்கவுள்ளது- அமைச்சர் சந்தன அபேரத்ன
மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம் தொடர்பான யோசனையை அரசாங்கத்தின் சார்பில் முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்னவும் தெரிவித்துள்ளார். இதே சட்டமூலத்துடன் தொடர்புடைய தனிநபர் பிரேரணை, அண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் இரா. சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பித்திருந்த பிரேரணைகளுடன் இது ஒத்துள்ளது. எனவே இதை மீண்டும் ஆராய தேவையில்லை என்றும், உடனடியாக நிறைவேற்ற […]