ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்-CPJ
இலங்கையை சேர்ந்த சுயாதீன தமிழ் ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாகரிகள் பாரபட்சமற்ற விரைவான விசாரணையை நடாத்த வேண்டும். அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்குகின்ற பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழுவின்(CPJ) திட்ட இயக்குநர் Carlos Martinez de la Serna வியாழக்கிழமை அறிக்கை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் டிசம்பர் 26 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் வைத்து தாக்கப்பட்டு கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளார். […]