கிளிநொச்சியில் நடைபெற்ற மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டி:புதியபாரதி விளையட்டுக்கழகம் சம்பியனானது!
கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் ஆதவன் விளையாட்டுக்கழகம் நடாத்திய சுழற்சி மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டியில் புதியபாரதி விளையட்டுக்கழகம் சம்பியனானது. மேற்படி போட்டியானது 29-12-2024 ஆம் திகதி பி. ப 6.00 மணிக்கு ஆதவன் விளையாட்டு கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றது. முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டார். 5 சுற்றுக்களை கொண்ட போட்டியில் புதியபாரதி எதிர் குறிஞ்சி அணிகள் இறுதிப்போட்டியில் போட்டியிட்டு 3-0 என்ற […]