உள்ளூர்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளராக கயந்த கருணாதிலக்க நியமனம்.

  • December 2, 2024
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெகுஜன ஊடக அமைச்சராகவும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளராகவும் பணியாற்றினார். இதையும் படியுங்கள்> முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு அத்துடன், அமைச்சரவை ஊடகப் பேச்சாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். கயந்த கருணாதிலக்க 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் […]

உள்ளூர்

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

  • December 2, 2024
  • 0 Comments

  முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பிரதீப் ஹெட்டியாராச்சி, பிரதீப் அபேரத்ன மற்றும் மஹேன் வீரமன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் […]

உள்ளூர்

மீண்டும் வானிலையில் ஏற்பட்ட மாற்றம்.

  • December 2, 2024
  • 0 Comments

வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழை இல்லாத வானிலை காணப்படும். வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக […]

உள்ளூர்

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்..!

  • December 2, 2024
  • 0 Comments

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இதேவேளை ஃபெங்கல் புயல், நேற்று காலை 11.30 மணியளவில் வட தமிழகம் – புதுச்சேரி கரையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்ததது. ஃபெங்கல் புயல் காரணமாக இந்தியாவின் […]

உள்ளூர்

மன்னார் மக்கள் வீதியை மறித்து போராட்டம்

  • November 25, 2024
  • 0 Comments

வெள்ள நீரை வெளியேற்ற கோரிதலைமன்னார் பிரதான வீதியில் உள்ள விலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டம்; நடத்தியுள்ளனர் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளுக்குடியிறுப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பாவிலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றக் கோரி நேற்று (24) மதியம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பாவிலுப்பட்டான் கிராமத்தில் 108 குடும்பங்கள் வசித்து வருகின்றாhர்கள் பாவிலுப்பட்டான கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை […]

உள்ளூர்

அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

  • November 23, 2024
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக சிவில் செயற்பாட்டாளர்கள் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கு ஏற்ப ஆசனங்கள் ஒதுக்கப்படாததால், நேற்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த ஆசனத்திலும் அமர வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது யாழ்.மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார். பாராளுமன்ற ஊழியர் ஒருவர் வந்து நாடாளுமன்ற உறுப்பினரிடம் இது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் […]

உள்ளூர்

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு பொலிஸார் உடந்தை

  • November 16, 2024
  • 0 Comments

கிளிநொச்சியின் பல பிரதேசங்களில்; சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ந்து இடம்பெறுகின்றது என கிளிநொச்சி வாழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர் சட்டவிரோத மணல் அகழ்வினால் பெறுமதியான வயல் நிலங்கள் உள்ளிட்ட தனியார் காணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளையர்கள் இரவு நேரங்களில் விவசாயம் செய்யும் மக்களுக்கு சொந்தமான காணிகளிலும் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்கள் கிளிநொச்சி பொலீஸாருடன் நல்ல உறவில் இருப்பதனால் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக பொலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொது மக்கள் குற்றம் […]

உள்ளூர்

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு ஜனாதிபதி திட்டம்.

  • October 28, 2024
  • 0 Comments

இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் நடத்துவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, உள்ளுராட்சி மன்றத்திலிருந்து அமைச்சரவை வரை முழு அரச கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதனுடாகவே, நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் எதிர்கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் […]

உலகம்

அமெரிக்காவில் வானொலி கோபுரத்துடன் ஹெலிகொப்டர் மோதி விபத்து 4 பேர் பலி.

  • October 22, 2024
  • 0 Comments

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதிய வேகத்தில் வெடித்துச் சிதறியதோடு தீப்பற்றியுள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலியானதாக ஹூஸ்டன் மேயர் ஜோன் விட்மயர் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இது ஒரு சோகமான உயிரிழப்பு ஆகும். விபத்து நடைப்பெற்ற பகுதியில் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் எலிங்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். சம்பவம் […]

செய்திகள்,தமிழ்செய்திகள்,யாழ்ப்பாணம்செய்திகள், உள்ளூர்

மூன்று நாட்கள் காலக்கெடு வழங்கியது அரசு உதய கம்மன்பிலவுக்கு

  • October 16, 2024
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான இமாம் மற்றும் அல்விஸ் விசாரணைக்குழு அறிக்கைகள் மறைத்து வைத்திருப்பது குற்றம் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். எனவே அவற்றை உரிய தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு அரசாங்கம் 3 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதியரசர்களான இமாம் மற்றும் அல்விஸ் ஆகியோர் சமர்ப்பித்த அறிக்கைகளை புதிய அரசு 7 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று உதய கம்மன்பில […]