விடுதலை புலிகளின் ஆதரவாளனாக விமர்சித்த போதும் நாட்டிற்கு எதிரான தீர்மானங்களை எடுக்கவில்லை -ரணில் விக்கிரமசிங்க
இலங்கை பாதுகாப்பு படைகளின் முன்னாள் தளபதிகள் மூவருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள புதிய தீர்மானங்கள் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை சந்தித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்தாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கு சுயாதீனமான ஆணைக்கழு ஒன்றை ஸ்தாபிக்க […]