உள்ளூர் முக்கிய செய்திகள்

தேசபந்து தென்னகோனை பதவி நீக்கும் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது

  • March 25, 2025
  • 0 Comments

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக பிரதியமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார். தேசபந்து தென்னகோன் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வியாழேந்திரனை கைது செய்தது

  • March 25, 2025
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வியாழேந்திரனை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்த குற்றத்திற்கே சவேந்திர டி சில்வாவுக்கு தடை விதிக்கப்பட்டது

  • March 25, 2025
  • 0 Comments

சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யவேண்டும் என உத்தரவிட்டவர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டங்களில் 58 வது படையணியின் தளபதியாக விளங்கிய சவேந்திர சில்வா என பிரிட்டன் தெரிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதிகள் கடற்படை தளபதி மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் மீதான தடைகளிற்கான காரணங்களை தெளிவுபடுத்தும் ஆவணமே இவ்வாறு தெரிவித்துள்ளது. சவேந்திர சில்வா சவேந்திர சில்வா தனிநபரின் வாழ்வதற்கான உரிமை , சித்திரவதைக்கு உட்படுத்தப்படாமலிருப்பதற்கான உரிமை, ஈவிரக்கமற்ற,அல்லது மனிதாபிமானற்ற விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,இழிவான விதத்தில் […]

உள்ளூர்

சர்வதேச நாணய நிதியத்தின் கைப்பாவையாக உள்ளது அநுர அரசென்கிறார் சஜித் பிரேமதாச

  • March 21, 2025
  • 0 Comments

கடந்த அரசாங்கம் உருவாக்கிய நாட்டையும் நாட்டு மக்களையும் மிகவும் அடக்குமுறைக்கு உள்ளாக்கும், சாதாரண மக்களின் தோள் மீது சுமையைச் சுமத்தி மக்களை பழிவாங்கும் ஐ.எம்.எப். உடன்படிக்கையால் மக்கள் சழரமத்தை எதிர்கொள்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார் இரு தரப்பு கடன் உடன்படிக்கைக்கும், சர்வதேச பிணைமுறி தரகர்களுடன் உடன்படிக்கைக்கும் சென்று ஐ எம் எப் கூறுகின்ற வசனங்களுக்கு நடனமாடுகின்ற, ஐ எம் எப் இன் கைப்பாவையாக இந்த அரசாங்கம் உருவாகியிருப்பதாக் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார் பாராளுமன்றத்தில் நேற்று […]

உள்ளூர்

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி வெல்லுமென்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

  • March 17, 2025
  • 0 Comments

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடல், முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் நேற்று (16-03-2025) இடம்பெற்றது. இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் […]

முக்கிய செய்திகள்

வடக்கு மாகாணம் உட்பட பல மாகாங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

  • March 16, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அநுராதபுர மாவட்டத்திலும் இன்றுஇடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.  

உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்

  • March 6, 2025
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றால் மேர்வின் சில்வா நேற்று இரவு (05- 03-2025) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொட பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளுக்காக அவர் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாதாள உலக குழு தலைவரான ‘மிதிகம ருவனுக்கு’ விளக்கமறியல் நீடிப்பு

  • March 5, 2025
  • 0 Comments

பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான ‘மிதிகம ருவன்’ என்று அழைக்கப்படும் ஜயசேகர விதானகே ருவன் சாமர என்பவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுல் லங்காபுர இன்று உத்தரவிட்டுள்ளார். ‘மிதிகம ருவன்’ என்பவர் இன்றைய தினம் ஸ்கைப் காணொளி அழைப்பு ஊடாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘மிதிகம ருவன்’ என்பவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த 79 வயதுடைய தாயொருவர் உயிரிழந்துள்ளார்

  • March 5, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில், மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த வயோதிப பெண் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்த வேளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த 79 வயதுடைய வயோதிப பெண்ணே உயிரிழந்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வயோதிப பெண், கோப்பாய் அஞ்சல் அலுவலகத்தில் உதவி தொகை பெறுவதற்காக கடந்த மாதம் 17ம் திகதி சென்றுள்ளார். உதவி தொகை பெற்ற பின் நடந்து வீடு திரும்பி கொண்டிருந்த வேளை பெண்ணொருவர், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழ் மக்களின் விடயத்தில் அநுர அரசாங்கத்திற்கும் முன்னைய அரசாங்கங்களுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை- ஜோசப் ஸ்டாலின்

  • March 5, 2025
  • 0 Comments

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த கால அரசுகளைப் போன்று அனுர அரசும் ஏமாற்றும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். வட மராட்சிக்கு நேற்று (04-03-2025) விஜயம் மேற்கொண்ட இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் […]