முக்கிய செய்திகள்

அரசியலமைப்பு உடனடியாக ரத்து செய்யப்படவேண்டும்-கர்தினால் 

  • February 4, 2025
  • 0 Comments

யுத்தத்தின் போர்வையில் நாட்டில் தோன்றியுள்ள சர்வாதிகார வெறி, நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடி என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். எனவே, தற்போதுள்ள ஊழல் நிறைந்த அமைப்பை மாற்றி, நாட்டிற்கு உண்மையான சுதந்திரத்தை கொண்டு வர, தற்போதைய அரசியலமைப்பை உடனடியாக ரத்து செய்து, புதிய அரசியலமைப்பை கொண்டு வருமாறு ஜனாதிபதியிடமும், தற்போதைய அரசாங்கத்திடமும் கேட்டுக்கொள்வதாக ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04) காலை பொரளை அனைத்து புனிதர்கள் […]

உலகம்

வரியை உயர்த்திய விவகாரத்தில் அமெரிக்கா மீது [WTO] சீனா வழக்கு தொடரவுள்ளது

  • February 4, 2025
  • 0 Comments

அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களை காரணம் காட்டி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார். இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்க பொருட்களுக்கு கனடாவும் 25 சதவீதம் வரி விதித்தது. […]

உலகம்

கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக உருவாக்குவோம்- டொனால்டு டிரம்ப்

  • February 4, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் அண்டை நாடான மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார். எண்ணை இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரி சக்திகளுக்கு 10 சதவீத வரி விதித்தார். இதைத்தவிர சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. […]

உலகம் முக்கிய செய்திகள்

ஐரோப்ப நாடான கிரீசில் 72 மணித்தியாலங்களில் 200 முறை நிலநடுக்கம்

  • February 4, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடான கிரீசில் சாண்டோரினி தீவு அமைந்துள்ளது. இங்கு கடலுக்கு அடியில் கடந்த 3 நாட்களில் 200-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் பதிவாகின. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாண்டோரினி தீவில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது இதனையடுத்து நிலநடுக்கத்தால் ஏற்படும் ஆபத்தை குறைக்க அரசின் வழிகாட்டுதல்களை தீவிரமாக கடைபிடிக்கும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

சிறைசாலை கைதிகளை உறவினர்கள் பார்ப்பதற்கு விசேட அனுமதி – சிறைச்சாலை ஆணையாளர்

  • February 3, 2025
  • 0 Comments

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாக கைதிகளை காண உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாளை ; 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட உள்ளது. அதற்கமைய உரிய பாதுகாப்புகளுடன் திறந்த முறையில் சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாகவே கைதிகளை காண அனுமதி […]

முக்கிய செய்திகள்

ரோகிங்யா அகதிகளை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அனுப்பி வைக்கமுடியாதென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

  • February 1, 2025
  • 0 Comments

மனித சமூகம் பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் அகதிகள் புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் ஒடுக்குமுறைக்குள்ளாக கூடிய நாட்டிற்கு மீள செல்லுமாறு நிர்ப்பந்திக்க முடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் தடுத்துவைக்கபட்டுள்ள ரோகிங்யா அகதிகள் குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை முன்வைத்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் ஒரு நபர் பலவந்தமாக காணாமலாக்கப்படும் ஆபத்தை எதிர்கொள்வார் என கருதுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பின் […]

முக்கிய செய்திகள்

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் தீய பொருட்கள் இல்லையென எவ்வாறு அரசு சொல்ல முடியுமென எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்

  • January 31, 2025
  • 0 Comments

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் கட்டாயம் பரிசீலனை செய்யப்பட வேண்டியவை என குறிப்பிடப்பட்டு ஒதுக்கப்பட்nருந்த 80 சதவீத கொள்கலன்கள் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார் அத்துடன் இது நாட்டின் வரி வருமானத்தில் பாரிய இழப்பை ஏற்பட்டுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களாக எழுந்துள்ள துறைமுக கொள்கலன் நெரிசல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று (31) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் […]

உலகம்

அமெரிக்கர்களின் வருமான வரியை ரத்து செய்ய டிரம்ப் திட்டமிட்டுள்ளார்

  • January 29, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ந்தேதி பதவியேற்றுக்கொண்டதில் இருந்து பல தடாலடி உத்தரவுகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அமெரிக்க மக்களுக்கான வருமான வரியை ரத்து செய்யும் திட்டம் தன்னிடம் இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வருமான வரிக்கு பதிலாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை உயர்த்த போவதாகவும் இதன் மூலம் அமெரிக்க மக்களைப் பணக்காரர்களாக ஆக்க முடியும் என்று டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் பெடரல் அரசும் மாகாண அரசும் தனித்தனியாக […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு அடங்கலாக 7 மாவட்டங்களில் காற்றின் தரம் பாதிப்பு

  • January 28, 2025
  • 0 Comments

இலங்கையில் காற்றின் தரக் குறியீடு இன்று முழுவதும் 58 முதல் 120 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கொழும்பு, காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு சற்று ஆரோக்கியமற்ற நிலை வரை அதிகரிக்கக்கூடும் எனவும் அதே நேரத்தில் பிற பகுதிகளில் மிதமான மட்டத்தில் இருக்கும் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

ரஸ்சிய படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விரைவில் மீட்க நடவடிக்கையெடுக்கப்படும்- ரஸ்சிய தூதுவர்

  • January 28, 2025
  • 0 Comments

பயண முகவர்கள் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு முயன்று ரஸ்சிய படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் உள்ளிட்டவர்களை மீட்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் விரைந்து முன்னெடுக்கப்பதாக இலங்கைக்கான ரஸ்சிய தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவிடத்தில் உறுதியளித்துள்ளார் இலங்கைக்கான ரஸ்சிய தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யனுக்கும், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கும் இடையிலான உத்தியோக பூர்வமான சந்திப்பொன்று நேற்று (27) கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் பிரதியமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற […]