இந்தியா

தமிழகத்தின் ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் கைது – இலங்கை கடற்படை அராஜகம்

  • January 26, 2025
  • 0 Comments

தமிழக மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். தனுஸ்கோடி மற்றும் தலைமன்னார் கடற்ப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை செய்தது. அத்துடன் மீனவர்களின் மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது.  

முக்கிய செய்திகள்

இராஜபக்ஸக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தீவிரமடைந்தால் நாங்கள் அச்சமடைய போவதில்லையென நாமல் தெரிவித்துள்ளார்

  • January 26, 2025
  • 0 Comments

அரசியல் கட்டளைகளை கடினமான முறையில் செயற்படுத்தும் பொலிஸார் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபகஸ தெரிவித்தார். குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமது சகோதரரான யோசித்த ராஜபக்ஸவை நேற்று (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேலுள்ளவாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எனது தம்பியை தங்காலையில் இருந்து கொழும்புக்கு பாதுகாப்பாக அழைத்து […]

முக்கிய செய்திகள்

தனியார் துறையினரின் 4,000 மெட்ரிக் தொன் அரிசி சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது

  • January 25, 2025
  • 0 Comments

தனியார் துறையால் இறக்குமதி செய்யப்பட்ட 4,000 மெட்ரிக் தொன் அரிசி இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளது அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கிய காலம் முடிவடைந்ததால், குறித்த அரிசி கையிருப்பு இன்னும் சுங்கத்தில் இருப்பதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட தெரிவித்தார். நாட்டில் அரிசி பற்றாக்குறைக்கு தீர்வாக அரிசியை இறக்குமதி செய்ய அரச வணிக கூட்டுத்தாபனத்திற்கும் தனியார் துறைக்கும் அனுமதி வழங்கியிருந்தது. இறக்குமதிக்கான காலக்கெடு கடந்த 10 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. […]

இந்தியா

கெஜ்ரிவாலின் உயிருடன் விளையாடுகிறீர்களா?: என அமித்ஸா மற்றும் மோடியிடம் கேள்வியெழுப்பியுள்ள அதிஸி

  • January 24, 2025
  • 0 Comments

டெல்லி சட்டசபை தேர்தல் திர்வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல் அமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டு வருகிறார். கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் மாநில போலீசார் வழங்கும் பாதுகாப்பை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் டெல்லி போலீசார் முறைப்பாடு செய்துள்ளனர் இதையடுத்து, கெஜ்ரிவாலுக்கு வழங்கி வந்த பாதுகாப்பை பஞ்சாப் மாநில போலீஸ் திரும்பப் பெற்றது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இசட்-பிளஸ் பாதுகாப்பு […]

இந்தியா

சீமானுக்கு எதிராக போராடிவர்களில் 878 பேர் மீது வழக்குப் பதிவு

  • January 23, 2025
  • 0 Comments

தந்தை பெரியார் குறித்த அநாகரிக பேச்சிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுவரை ஆதாரம் அளிக்காததால் அவரது வீடு முற்றுகையிடப்படும் என்று தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஸ்ணன் தெரிவித்து இருந்தார். இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே அறிவித்தப்படி சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் முற்றுகையிட முயன்றனர். காவல் துறையினர் அமைத்த தடுப்புகளை மீறி அவர்கள் செல்ல முயன்றனர். மேலும், சீமான் உருவப்படத்தை […]

முக்கிய செய்திகள்

கூட்டுறவு சங்க தேர்தலில் பல இடங்களில் அரச கட்சி தோல்வி

  • January 21, 2025
  • 0 Comments

பல பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது இதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது. தோல்வியை தடுப்பதற்கே அரசாங்கம் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஹோமாகம, கொரட்டுவ, களனி,போருவளை […]

இந்தியா முக்கிய செய்திகள்

ஆமைக்கறி சீமானின் அப்பாடக்கர் வெளிவந்தது போட்டுடைதார்- இயக்குநர் சங்ககிரி

  • January 20, 2025
  • 0 Comments

பிரபாகரனுடன் சீமான் இருக்கும் போட்டோவை எடிட் செய்ததே நான்தான் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது அந்த புகைப்படத்தை கவனித்தீர்கள் என்றால் சீமானுக்கு நிழல் வைத்திருப்பேன் என தெரிவித்த அவர் என்னால் முடிந்த அளவுக்கு அப்புகைப்படத்தை சிறப்பாக எடிட் செய்து கொடுத்ததாக மேலும் தெரிவித்துள்ளார் பெரிதும் பாராட்டப்பட்ட ‘வெங்காயம்’ திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அடுத்ததாக ‘பயாஸ்கோப்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், விடுதலை […]

முக்கிய செய்திகள்

யாழ். குருநகர் சிறிய சூறாவளி : 49 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்

  • January 19, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) வீசிய மினி சூறாவளி காரணமாக மூவர் காயமடைந்துள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என். சூரியராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், குருநகர் ஜே 68 மற்றும் ஜே 69 கிராம சேவையாளர் பிரிவுகளில் 49 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை மூவர் காயமடைந்துள்ளனர். அதேவேளை 49 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன. சேத விபரங்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ […]

முக்கிய செய்திகள்

நீதியை நிலைநாட்டுவதே அரசின் நோக்கம் என பிரதமர் தெரிவித்துள்ளார்

  • January 19, 2025
  • 0 Comments

சலுகைகள் மற்றும் ஆதரவின் அடிப்படையில் நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். சீன மக்கள் குடியரசின் முழுமையான நிதி உதவியின் கீழ் புனரமைக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற கட்டடத்தை நேற்று (18) பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், ஒரு நாட்டின் நீதி முறைமையில், நாட்டு மக்களுக்கு நீதி வழங்குவதற்கான வசதிகளுக்காக செய்யப்படும் […]

முக்கிய செய்திகள்

சீனாவுக்குள் இலங்கை சிக்கவில்லையென்கிறார் ஜனாதிபதி அநுர

  • January 19, 2025
  • 0 Comments

சீனாவின் கடன்பொறி குறித்தும் சீனா இலங்கையை இராணுவமயப்படுத்துவதாகவும் மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க நிராகரித்துள்ளார் உலகின் தென்பகுதி நாடுகளிற்கு அபிவிருத்தி அவசியம், வெளிநாட்டு முதலீடுகள் கடன்கள் இல்லாமல் அவற்றை சாதிக்க முடியாது அவ்வாறான உதவிகளை கடன்பொறியாக கருதுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். சீனாவின் சின்ஹூவாவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையும் சீனாவும் இரு தரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கின்றன என இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி […]