உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் கஞ்சாவுடன் பிடிபட்ட விசுவமடு பெடியன்!

  • January 12, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டி சந்தியருகில் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்வைத்தீவு, விசுவமடுவைச் சேர்ந்த 37 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து ஒரு கிலோ 345 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையும் படியுங்கள்>யோகாசன பயிற்சி செய்துகொண்டிருந்தவர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வலி.வடக்கில் மிகப் பிரமாண்டமாக தயாராகும் திருக்குறள் வளாகம்!.

  • January 12, 2025
  • 0 Comments

வலி.வடக்கு மாவிட்டபுரத்தில் மிகப் பிரமாண்டமாக தயாராகின்றது திருக்குறள் வளாகம். 1330 குறள்களையும் என்றும் அழியாத வகையில் கருங்கற்களில் செதுக்கி அதனை நம் சமூகத்திற்கு வழங்கும் அரிய முயற்சியாக இந்த திருக்குறள் வளாகம் அமைந்துள்ளது. திருக்குறள் பற்றி வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து ஆராச்சிகள் மற்றும் ஆய்வுகள் செய்வதற்கு வசதியாக, பிரத்தியேகமாக பல வசதிகள் இந்த அரண்மனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மனதை ஒருநிலைப்படுத்தும் தியானத்தின் மகத்துவத்தை தற்கால நம் சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இங்கு தியான மண்டபம் அமைக்கப்படுகின்றது. […]

முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் விபத்து ஒருவர் பலி

  • January 10, 2025
  • 0 Comments

இன்று (10); யாழ். பருத்திதுறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த விபத்தில் கனேசபுரம் கிளிநொச்சியை சேர்ந்த 75 வயதுடைய குமரேஸ்வரன் யோகலிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

SJB-UNPயை இணைக்கும் பொறுப்பை ஏற்ற முன்னாள் அமைச்சர்!

  • January 10, 2025
  • 0 Comments

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைக்கும் பொறுப்பை, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டும் என்று பல தரப்பினர் விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்த பின்னரே ராஜித சேனாரத்ன இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் குறித்து அரசியல் மேடையில் பேச்சுக்கள் இடம்பெற்று வரும் நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கான சிறப்பு […]

முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் – ஊடகத்துறை அமைச்சர்

  • January 9, 2025
  • 0 Comments

கடந்த காலங்களில் நாட்டில் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அவைத்தலைவர் காரியாலயத்தில் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சபையிலிருந்து வெளிநடப்பு செய்யப்போவதாக எச்சரிக்கை

  • January 9, 2025
  • 0 Comments

; யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது பாராளுமன்ற உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சபாநாயகருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரத்தை பெறமுடியாமலிருப்பது குறித்த தனது ஆழ்ந்த கரிசனையை வெளியிடுவதாக அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற அடிப்படையில் எனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு இந்த உரிமை மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் உங்கள் அலுவலகம் அறிவித்தது போல இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த விவகாரத்திற்கு […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்கள் சட்டத்தரணிகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன – வடக்கு ஆளுநர்

  • January 8, 2025
  • 0 Comments

ஆலயங்கள் சமூகசேவைக்கு செலவு செய்வதைவிட வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன என வடக்கு மாகாண வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் கவலை வெளியிட்டார். அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று (07) இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று ஆலயங்களில் உண்மையான கடவுள் பக்தி இல்லை இதனால் பல ஆலயங்கள் நீதிமன்றப் படியேறியுள்ளன. புலம்பெயர் […]

உலகம்

நேபாளத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • January 7, 2025
  • 0 Comments

நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தின் லொபுசே என்ற பகுதிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. {{CODE1}} நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியுள்ள நிலையில் இதனை தொடர்ந்துஇ இந்தியாவின் புதுடில்லிஇ […]

இந்தியா

இந்தியாவில் முதல் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் கண்டறியப்பட்டது!

  • January 7, 2025
  • 0 Comments

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது. எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் முதல் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் […]

உள்ளூர்

யாழில் வன்முறைக் கும்பலின் அட்டகாசம்:அதிர்ச்சி காணொளி!

  • January 4, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்திலுள்ள மதுபான சாலையொன்றில் நுழைந்து வன்முறைக் கும்பலொன்று தாக்குதல் நடாத்திய அதிர்ச்சி சிசிரிவி காணொளிகள் வெளியாகியுள்ளது. கடந்த 31.12.2024 ஆம் திகதியன்று யாழ் நகரிலுள்ள மதுபான சாலையொன்றிற்குள் கறுப்புத் துணியால் முகத்தை மறைத்துக் கொண்டு வாள்களுடன் வன்முறைக் கும்பலொன்று நுழைந்துள்ளது. இதன் போது குறித்த மதுபானசாலையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் சிசிரிவி காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை […]