உள்ளூர்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(15.12.2024 )

  • December 16, 2024
  • 0 Comments

தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக தமிழர் விவகாரத்தில் செயற்படக்கூடாது காணிகளை விடுவிக்க கால எல்லை ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் -சிறிதரன் எம்பி தெரிவிப்பு  மீண்டும் யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்கும் கப்பல் சேவை ஆரம்பம் யாழில் எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பலி! மஹிந்தவின் பாதுகாப்பு விலக்கப்பட்டது குமுறுகிறார் -மனோஜ் கமகே  இலங்கையின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்கப்படும் என்கிறார் ஐநாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் https://youtu.be/2svXrqbsfvc

இந்தியா

இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சி முறைமையா?

  • December 15, 2024
  • 0 Comments

இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டு வரவே ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டமூலத்தை பா.ஜ.க.கொண்டு வந்துள்ளது என தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார் திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- ஆதவ் அர்ஜீனா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எங்கள் குறித்து கருத்து கூறுவதே தவறு. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை. எந்த அழுத்தத்தாலும் என்னை […]

உலகம்

கனடாவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சஸ்கட்ச்வான் முதல்வர் கோரிக்கை

  • December 13, 2024
  • 0 Comments

கனடிய மக்களின் உற்பத்திகள் மீது வரி விதிப்பது நகைப்பிற்குரியது என அவர் தெரிவித்துள்ளார். கனடாவின் ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா வரி விதிப்பது குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். ட்ரம்ப் அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய ஓர் அரசாங்கம் நியமிக்கப்படுவது பொருத்தமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார். கனடியர்கள் தங்களது தெரிவினை மேற்கொள்ளக்கூடிய ஒர் வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனவும் இதற்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் ஸ்கொட் மோ மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூர்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி)

  • December 6, 2024
  • 0 Comments

    ஸ்பெயின் நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை தாக்கி கைப்பேசியை பறித்த இருவருக்கு விளக்கமறியல் கிளிநொச்சியில் தாய் தூக்கில் மரணம் 14 வயதுடைய மகன் நிறைவெறியில் கைது மண்டையிலிருந்த கொண்டையை மறந்த சபாநாயகர் அசோகரன்வல வவனியாவில் கொரிய நிறுவனத்தின் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டம் கோபா குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு https://fb.watch/wiUTYwy9YW/

இந்தியா

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.

  • December 2, 2024
  • 0 Comments

கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சில மாவட்டங்களில் நேற்றிரவு வரை மழை நீடித்தது. தற்போது புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய […]

இந்தியா

பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது- கனிமொழி கவலை.

  • November 26, 2024
  • 0 Comments

சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினாட கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், ‘பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால், ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. ஆண்களுக்கு நிகராய் சமூக அடுக்கின் அத்தனை படிநிலைகளையும் தனது அறிவால், உழைப்பால் கட்டியமைத்தவர்கள் பெண்கள். ஆனால், வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை […]

உள்ளூர்

இலாம்புக்கு சங்கறுத்து சங்கில் சங்கமமானது இலாம்பு சுயேட்சை குழு 4.

  • November 8, 2024
  • 0 Comments

வன்னி தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு 4. இலாம்பு சின்னத்தில் போட்டியிடுகின்றது. சுயேட்சை குழுவின் முதன்மை வேட்பாளரான சிறிபாலன் ஜென்சி ஜனநாயக உள்ளக பிரச்சினை காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இன்றைய தினம் மன்னாரில் இதனை அவர் அறிவித்துள்ளார் தமிழர் தாயகப் பரப்பில் பொது தேர்தலில் ; பல சுயேட்சை குழுக்கள் போட்டியிடுகின்றன. இவ்வாறான சுயேட்சை குழுக்களின் நோக்கம் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதே என அவர் […]

உலகம்

ரொறன்ரோவில் தீ விபத்து குழந்தை பலி.

  • October 26, 2024
  • 0 Comments

  கனடாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் சிசுவொன்று கொல்லப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். ரொறன்ரோவின் எக்லின்டன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டதால் இ சிசுவொன்று உயிரிழந்த அதே வேளை பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். காயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ விபத்து ஏற்படும் போது ஆறு பேர் வீடடில் இருந்தனர் எனவும், தீ விபத்து காரணமாக சிலர் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூர்

மன்னாரில் தமிழரசு கட்சி தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் திறந்து வைப்பு

  • October 18, 2024
  • 0 Comments

தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்டத்திற்கான பிரதான கட்சி அலுவலகம் நேற்று (17) மாலை மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் தமிழரசு கட்சி வேட்பாளரும் சட்டத்தரணியுமான செல்வராஜ் டினேஸனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது மன்னார் மாவட்ட தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் கட்சி சார் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாகவும் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது அத்துடன் தமிழரசு கட்சியின் இளைஞர்களுக்கான கூட்டமும் மன்னார் தனியார் விடுதியில் நடைப்பெற்றதுமன்னார் மாவட்டத்தில் பல கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடலுக்கு வருகை […]