முக்கிய செய்திகள்

இத்தாலி, 2026 டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதி பெற்றது

  • July 14, 2025
  • 0 Comments

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்த உள்ள 2026 டி20 உலகக் கிண்ண தொடருக்காக, இத்தாலி அணியின் தகுதி பெற்ற சாதனை ஒரு வரலாற்றுப் பதிவு ஆகியுள்ளது. இதுவே சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐஊஊ) போட்டிக்காக இத்தாலி தகுதி பெற்றது முதல் முறையாகும். இத்தாலி அணி, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) ஹேக்கில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்திடம் 9 விக்கெட்டுகளால் தோல்வியடைந்த போதிலும், தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் இருந்து 2026 உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதி […]

உள்ளூர்

அர்சுனா எம்பியின் வாயாலேயே எதிர் கட்சி எம்பிக்களை CID யினர் விசாரித்தனர்- தயாசிறி ஜயசேகர

  • July 14, 2025
  • 0 Comments

323 கன்டெய்னர்கள் சுங்கச் சோதனை இன்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணை நடத்தியதற்கும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரிமைச் சிக்கல்களை எழுப்பியதற்கும், சபாநாயகரின் பதில் இதுவரையும் கிடைக்கவில்லையென தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார் இந்த விவகாரம் கடந்த வாரம் ஒரு ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளா அதனைத் தொடர்ந்து, சில எதிர்க்கட்சித் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊஐனுயால் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படினர். இதற்கு எதிர்வினையாக, அவர்களது அழைப்புகள் முற்றிலும் காரணமற்றவை என எதிர்க்கட்சியினர் […]

உள்ளூர்

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப எரிபொருள் விலைகளில் மாற்றம்!

  • June 30, 2025
  • 0 Comments

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாகும். இதேபோல், மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாவாகும். மேலும் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் […]

உலகம்

ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்!

  • June 27, 2025
  • 0 Comments

  ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடும் சேதமடைந்ததுடன் குறிப்பாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப்பெரிய சவாலை […]

உள்ளூர்

யாழ் அச்சுவேலியில் கிணற்றில் கலர் மீன்களை பிடிக்க முயற்சித்த 10 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி

  • June 27, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, தோப்பு பகுதியில் 10 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று மாலை (26-06) இடம்பெற்றுள்ளது. பிரதீபன் தச்ஷன் (வயது 10) அரசடி, தோப்பு என்ற முகவரியைக் கொண்ட சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். தனது பேரனுடன் தோட்டத்துக்கு சென்ற சிறுவன், பேரன் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் பொழுது, கிணற்றில் கலர் மீன்களை பிடிக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாளியினை கிணற்றில் விட்ட பொழுது கயிற்றில் கால் சிக்குண்டு கிணற்றுக்குள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணிமனித புதைகுழி அகழ்வின் போது சர்வதேச நிபுணர்களின் பங்களிப்பு அவசியமென சட்டத்தரணிகள் தெரிவிப்பு

  • June 26, 2025
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழி குறித்த விசாரணைகள் சர்வதேச கண்காணிப்பின் கீழ் இடம்பெறுவதை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் உறுதி செய்யவேண்டும் என பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்செம்மணி மனிதபுதைகுழி காணப்படும் பகுதிக்கு வோல்க்கெர் டேர்க் விஜயம் மேற்கொண்டவேளை அவருடன் சேர்ந்து அந்த பகுதிக்கு சென்ற சட்டத்தரணிகள் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். அவர்கள் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளதாவது. செம்மணி மனித புதைகுழியை தோண்டும் பணிகளிற்கான […]

உள்ளூர்

வடக்கிலே தமிழர்கள் வற்றிபோகின்றார்கள் என ஆறு திருமுருகன் கவலை வெளியிட்டுள்ளார்.

  • June 25, 2025
  • 0 Comments

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நிறுவுனர் நினைவு தானமும் பரிசளிப்பு விழாவும் நேற்று (24-06) நடைபெற்ற நிலையில் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கிய சந்தர்ப்பத்திலே அவர் அங்கு உரையாற்றினார். இன்று தேசியம், தமிழ்த் தேசியம் மற்றும் சுதேசியம் ஆகிய சொற்களெல்லாம் அரசியல்வாதிகளிடத்தே அடிக்கடி நடமாடினாலும் மகாஜனாக் கல்லூரி ஸ்தாபகர் பாவலர் துரையப்பா பிள்ளை அவர்கள் இந்த மண்ணிலே பிறந்த நாங்கள் ஏன் சுதேசியத்தைப் பாதுகாக்கக்கூடாது அதைப்பற்றி பேசக் கூடாது என்று அன்றே அடியெடுத்துக்கொடுத்தவர். அதனாலேயே அவரது சிலையின் பெயர்ப்பலகையில் […]

உள்ளூர்

இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை..!!!

  • June 25, 2025
  • 0 Comments

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது இனமேலாதிக்கம் மிகுந்திருக்கும் இலங்கைத் தீவில் சாத்தியமற்றது என்பதால், பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வகையிலான சர்வதேச விசாரணைக்கு வழிசெய்யுமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரியுள்ளார். இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருடனான சந்திப்பின் போதே […]

உள்ளூர்

ஈபிடிபியுடன் கூட்டணி இல்லை ஆதரவுக்காகவே சந்திப்பு நடைப்பெற்றது- சுமந்திரன்

  • June 7, 2025
  • 0 Comments

நாம் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் பேசியபோதும் அதிகூடிய ஆசனங்களைப்பெற்ற சபைகளிலே ஆட்சியமைப்பதற்கு அவர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோட்பாட்டைத்தான் முன்வைத்தோமே தவிர, கொள்கைகள் சார்ந்து பேசவில்லை. அதே அடிப்படையில் தான் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், கொள்கை சார்ந்து எதனையும் பேசவில்லை எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். செம்மணியில் உள்ள மனிதப்புதைகுழி தோண்டப்பட்டுவரும் நிலையில், அதனை அண்மித்த பகுதிகளிலும் […]

உள்ளூர்

பிரதமராக பதவிக்கு அமைச்சர் பிமலின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவிப்பு

  • June 1, 2025
  • 0 Comments

அமைச்சரவை மறுசீரமைப்பின் போது பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயரை மக்கள் விடுதலை முன்னணி பரிந்துரைத்துள்ளது. இதற்கு அமைச்சர்களான சுனில் ஹந்துனெத்தி மற்றும் லால் காந்த ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறதென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலைவரம் குறித்து தனியார் ஊடகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மக்கள் விடுதலை முன்னணிக்கும்,தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் […]