உள்ளூர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தாரிகள் யாரென அனுர அறிவிப்பாரா? முஜிபுர் ரஹ்மான் எம்.பி

  • April 20, 2025
  • 0 Comments

  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வெளியிடவுள்ள விசேட அறிவிப்பிற்காக காத்திருக்கின்றோம். இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் சாரா ஜெஸ்மின் மற்றும் சஹ்ரான் தங்கியிருந்த ஹோட்டல் அறை குறித்த தகவல்களையும் அரசாங்கம் வெளிப்படுத்தும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் […]

உள்ளூர்

அன்னை பூபதியின் நினைவு தினம் செயற்பாட்டாளருக்கு அழைப்பாணை

  • April 18, 2025
  • 0 Comments

சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன் அவர்களுக்கு மட்டக்களப்பு கொக்குவில் பிரதேச பொலிஸாரினால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. நேற்று பி.ப 4.25 மணிக்கு அவரது வீட்டுக்குச் சென்ற மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸார் இருவரினால் நாளை 19 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அன்னை பூபதியின் நினைவு தினம் தொடர்பான விசாரணைக்கு வருமாறு காத்தான்குடி மற்றும் கொக்குவில் பொலிஸாரினால் கையொப்பமிடப்பட்ட கடிதமொன்று வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கடிதமானது சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது. எனவே இதன்மூலம் தனது […]

உள்ளூர்

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை பயன்படுத்தி நேர்வேயில் நிதி சேகரிப்பு- அன்னை பூபதியின் மகள் முறைப்பாடு

  • April 15, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை வைத்து வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று அதனை ஒரு அரசியலாக்கி நினைவேந்தலைச் செய்யவுள்ளதாகவும் அதனை தடைசெய்யுமாறும் கோரி 3 பேருக்கு எதிராக அன்னை பூபதியின் மகள் இன்று முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆவது நினைவேந்தல் எதிர்வரும் 19 ஆம் திகதி அவரது சமாதியில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் குறித்த நினைவேந்தலை முன்னிட்டு மனித […]

உலகம் முக்கிய செய்திகள்

டொனால்ட் ரம்புக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் ஜனாதிபதி!

  • April 15, 2025
  • 0 Comments

வடக்கு கிழக்கு உக்ரைன் நகரான சுமி மீது ரஷ்ய நடத்திய அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இரு தரப்பினரிடையே தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி […]

இந்தியா முக்கிய செய்திகள்

தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

  • April 15, 2025
  • 0 Comments

அவருடைய வாழ்த்துச் செய்தியில், ‘மகிழ்ச்சியான புத்தாண்டு தினத்தையொட்டி அன்பான வாழ்த்துகள்! இந்தப் புத்தாண்டு வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும். அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசிர்வதிக்கப்படட்டும்.’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர். இதையும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் போதை மாத்திரைகள்; கஞ்சா, மற்றும மாவாவுடன் ஒருவர் கைது

  • April 11, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (10-04) இரவு முன்னெடுக்கப்பட்டது. 19 வயதான குறித்த சந்தேக நபரிடம் இருந்து 94 போதை மாத்திரைகளும் 465 கிராம் கஞ்சா கலந்த மாவாவும் மீட்கப்பட்டது. மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உள்ளூர்

ரணிலையும் மஹிந்தவையும் கைது செய்ய முடியுமாவென (நள்ளலமா) சாமர சம்பத் சவால்

  • April 11, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ் ஆகியோரை முடியுமால் கைதுசெய்து பாருங்கள் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (10-04) இடம்பெற்ற பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் உள்ள சித்திரவதைக்கூடங்கள், சட்டரீதியற்ற தடுப்பு நிலையங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியவற்றினை விசாரணை செய்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த அரசாங்கம் ரணில் விக்ரமசிங்கவின் ஒரு […]

உலகம் முக்கிய செய்திகள் வினோத உலகம்

மப்பும் மந்தாரமாக இரவு இருந்த போது கூரை இடிந்து விழுந்து 79 பேர் பலி 160 பேர் காயம்

  • April 9, 2025
  • 0 Comments

கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமினிகோவில் உள்ள புகழ்பெற்ற இரவுநேர கேளிக்கை விடுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென்று கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் பலர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மாடுகள் கடத்தும் மஸ்தான் எம்.பி. வவுனியாவில் சம்பவம்

  • April 9, 2025
  • 0 Comments

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 20 மாடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (08-04) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பூவரசன்குளம் சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், ஒரு லொறியை வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குறித்த லொறியில் அனுமதிப்பத்திரம் இன்றி 20 மாடுகள் கொண்டு செல்லப்பட்டமை கண்டறியப்பட்டது. லொறியில் இருந்த மூவரையும் கைது செய்த பொலிஸார், 20 மாடுகளையும் பொலிஸ் நிலையத்திற்கு […]

உள்ளூர்

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடை

  • April 7, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றுஇடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மனு எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் ரீட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மனுக்கள் மீதான எதிர்ப்புகளை மே […]