உள்ளூர்

முஸ்லீம் இளைஞனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புகாவலில் வைப்பதற்கு ஜனாதிபதி ஒப்பமிட்ட ஆவணம் வெளிவந்தது

  • April 7, 2025
  • 0 Comments

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் கொழும்பில் ஸ்டிக்கரினை ஒட்டிய இளைஞனை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க அனுமதி வழங்கிய ஆவணம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க , முகமட் ருஸ்டி தீவிரவாத சித்தாந்தங்களால் தூண்டப்பட்டு, சமூகங்களிற்கு இடையில்அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்குதீங்கு விளைவிக்கும் வகையில் செயற்படுவது , பாதுகாப்பு படையினரிடம் அத்தகைய செயல்களை தெரிந்தே மறைப்பது குறித்து சந்தேகம் காணப்படுபவதாகவும் இதன் காரணமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை […]

உலகம்

டிரம்பின் வரிவிதிப்பு எதிரொலி… கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

  • April 7, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, இலங்கைக்கு 44 சதவீத வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார் . அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் […]

உலகம் வணிகம்

உலகின் பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை எலான் மஸ்க் அவரே அவருக்கு விற்றுள்ளார்

  • March 29, 2025
  • 0 Comments

உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக பணக்காரருக்கும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். டிவிட்டரின் பெயரை எக்ஸ் என்று மாற்றிய எலான் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். இந்நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்துள்ளார். அதாவது எலான் மஸ்க் தனது சொந்த நிறுவனமான ஓ யுஐ நிறுவனத்துக்கு […]

உள்ளூர்

பாலஸ்தீன மக்களுககாக கொழும்பில் அமைதியான ஆர்ப்பாட்டமொன்று; இடம்பெற்றது.

  • March 29, 2025
  • 0 Comments

இந்த ஆர்ப்பாட்டமானது, இன்று ( ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கொழும்பு 7 தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், பாலஸ்தீன மக்களின் குழந்தைகள், தாய்மார்கள் கொன்று குவிப்பதை தடுத்து நிறுத்தல் வேண்டும். இதற்காக இலங்கை உட்பட உலக நாடுகள் ஒன்றுபட்டு ஐ.நா. ஊடாக அமெரிக்கா இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தல் வேண்டும். இந்த நோன்பு மாதத்தில் அவர்கள் செய்யும் கொலைகளை உடன் நிறுத்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளிலிருந்து 2வது நீதவானும் விலகல்

  • March 27, 2025
  • 0 Comments

கொழும்பு – கோட்டையில் உள்ள கிரிஸ் கட்டிடம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகளில் இருந்து விலகுவதாக கொழும்பு மேலதிக நீதவான் சுஜீவ நிஸங்க இன்று அறிவித்துள்ளார். குpரிஸ் கட்டிடம் தொடர்பான வழக்கு விசாரணைகளிலிருந்து விலகுவதாக கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுல திலகரத்ன திறந்த நீதிமன்றத்துக்கு இன்றைய தினம் காலை அறிவித்திருந்தார். இந்நிலையில், கிரிஸ் கட்டிடம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகளில் ஈடுபட்டிருந்த இரண்டாவது நீதவானான […]

உலகம்

ஹமாஸ் அமைப்பபை வெளியேறக் கோரி பாலஸ்தீன மக்கள் வீதிகளில் இரங்கி போராட்டம்

  • March 27, 2025
  • 0 Comments

கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் வரை உயிரிழந்தனர். 200 பேர் வரை பணய கைதிகளாக பிடித்துச்செல்லப்பட்டனர். இரத்னனை தொடர்ந்து பாலஸ்தீனத்தின் காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதில் அதிகமானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என ஐநா தெரிவிக்கிறது. காசா நகரம் முற்றாக […]

உலகம் வணிகம்

சாம்சங் நிறுவனத்தின் சீ.இ.ஓ. மாரடைப்பால் மரணம்

  • March 25, 2025
  • 0 Comments

சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி ஹான் ஜாங் ஹீ மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 63 வயதான ஹான் ஹாங் ஹீ உயிரிழந்ததை சாம்சங் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிந்ததாக சாம்சங் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இணை தலைமை செயல் அதிகாரி உயிரிழந்ததை அடுத்து, அவரது பதவியை ஏற்க இருப்பது யார் என்பது குறித்து அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. […]

இந்தியா சினிமா

சுஷாந்த் சிங் மரணம் கொலையல்ல தற்கொலை- சி.பி.ஐ. அறிக்கை

  • March 23, 2025
  • 0 Comments

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து நான்கரை ஆண்டுகள் மேற்கொண்டு வந்த விசாரணைக்கு முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, சி.பி.ஐ. இந்த வழக்கை முடித்து வைத்தது. இது குறித்து சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இறுதி அறிக்கையில் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14, 2020 அன்று சுஷாந்த் சிங் தனது பாந்த்ரா பிளாட்டில் இறந்து கிடந்தார். இவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வந்த இரண்டு வழக்குகளில் இறுதி அறிக்கையை […]

இந்தியா உலகம்

தமிழகத்தைச் சேர்ந்த மூவருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்டது

  • March 23, 2025
  • 0 Comments

  சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் என்பது அதிதீவிர குற்றம் ஆகும். இதனை மீறுபவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்படுகின்றன. எனினும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜு முத்துக்குமரன் (வயது 38), செல்வதுரை தினகரன் (34), கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகியோர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியாவுக்கு படகில் போதைப்பொருள் கடத்த முயன்றனர். கரிமுல் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது மடக்கிப்பிடித்த […]

உள்ளூர்

கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

  • March 21, 2025
  • 0 Comments

பிரான்ஸ், அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து கண்டி, நீர்கொழும்பு, ஜா-எல, வெள்ளவத்தை, நுகேகொடை, தங்காலை, மஹியங்கனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய முகவரிகளுக்கான பொதிகள் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தை வந்தடைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 20 பொதிகள் வந்துள்ளன. அவை உரிமை கோரப்படாததால், பொதிகளை பரிசோதிக்க 19 ஆம் திகதி தபால் மா அதிபரிடம் அனுமதி பெறப்பட்டது. பரிசோதனையின் போது 14 பொதிகளில் 272 கிராம் கஞ்சா போதைப் பொருளும், 2,049 […]