உள்ளூர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு 2,234 மில்லியன’ரூபா ஒதுக்கீடு

  • September 16, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்காக நவீன வசதிகளுடன் கூடிய ஐந்து மாடிக் கட்டிடம் நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூபாய் 2,234 மில்லியன் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2006ஆம் ஆண்டு முதல் அரச பல்கலைக்கழகங்களில் துணை சுகாதார விஞ்ஞான பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பத்தில் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டைக்கு துரத்தப்பட்டார் மகிந்த ராஜபக்ஸ

  • September 11, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது தந்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். கொழும்பு விஜேராம இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் தனது சொந்த ஊரான தங்காலைக்குத் திரும்பியுள்ளதாக நாமல் கூறினார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பு உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியிருந்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் நாமல் ராஜபக்ச வெளியிட்ட […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கை சிந்தித்து செலவீனம் செய்து வரிவிதிப்பூடாக பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும்- உலகவங்கி

  • September 10, 2025
  • 0 Comments

உலக வங்கி வெளியிட்ட புதிய அறிக்கையில், இலங்கை அதிக சிந்தித்துப் பயன்படுத்தும் செலவீனம் மற்றும் நியாயமான வரிவிதிப்பு மூலம் தனது பொருளாதார வளர்ச்சியை நிலையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ‘Sri Lanka Public Finance Review: Towards a Balanced Fiscal Adjustment’ எனப் பெயரிட்ட அறிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளில், உள்நாட்டு மொத்த உற்பத்தியின்(GDP) சுமார் 8 சதவீதம் அளவிலான நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மூலம் நாட்டின் மாக்ரோ பொருளாதார நிலைத்தன்மை மீட்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடுகிறது. […]

உள்ளூர்

யாழ் செம்மணியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன

  • August 29, 2025
  • 0 Comments

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் இதுவரை மொத்தம் 187 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 174 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 37வது நாளாக தொடர்ந்தன. இந்த பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.

உள்ளூர்

சோமரத்ன ராஜபக்ஸவின் உயிருக்கு ஆபத்தென்கிறார் அவரது சகோதரி ரோஹினி ராஜபக்ஸ

  • August 6, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதில் சாட்சியம் அளிக்கத் தயாராக இருப்பதாக, கிருஸாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபகஸ் தெரிவித்துள்ளார். இதனை அவரது மனைவி எஸ்.சி. விஜேவிக்ரம, ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.   அக்கடிதத்தில், யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட சித்திரவதைக்கூடங்கள் […]

உள்ளூர்

மகிந்தவுக்கு தமது சொந்த வீடுகளை அறுதியுறுதியோடு வழங்க காத்திருக்கும் சிங்கள மக்கள்

  • August 4, 2025
  • 0 Comments

உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்சவை வெளியேற்றினால் பெரும்பாலான மக்கள் உறுதிப்பத்திரங்களுடன் அவருக்கு வீடுகளை வழங்க காத்திருக்கின்றார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் வகையில் சட்டமூலம் ஒன்று வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதியான […]

உள்ளூர்

தமிழர்களுக்கு நீதி வேண்டுமென பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டறிக்கை வெளியீடு

  • July 31, 2025
  • 0 Comments

பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள கூட்டு செய்திக்குறிப்பில், யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள், சர்வதேச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும், அதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் கொண்டுவரவும் முக்கிய வாய்ப்பை அளிக்கின்றன என வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இக்கருத்தை எல்எவ்ஐ மற்றும் என்எவ்பி கட்சி உறுப்பினர்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர் தமிழர்களுக்கு நீதி, […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசர் உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தெரிவு

  • July 22, 2025
  • 0 Comments

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை அது பரிசீலனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. தற்போதைய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஜூலை 27ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ளார். அவர் ஜூலை 25ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் பிரியாவிடை உரை ஆற்றவுள்ளார். நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினராக செயல்பட்டதுடன், பல […]

உள்ளூர்

யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டடத்தை உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் பார்வையிட்டனர்

  • July 22, 2025
  • 0 Comments

மரபுச் சுற்றுலா மேம்பாடு மற்றும் கட்டடம் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இப்பார்வை இடம்பெற்றது. இதற்கு முன்னதாக, மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், பழைய கச்சேரி மற்றும் யாழ்ப்பாணக் கோட்டை ஆகியவற்றை புனரமைப்பது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு அவசியம் என மாவட்ட செயலர், உலக வங்கி குழுவினரிடம் வலியுறுத்தியிருந்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலையான பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க, உட்கடுமாணம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு இணங்க கடந்த இரண்டு மாதங்களாகவே உலக வங்கி […]

உள்ளூர்

இலங்கையின் மொத்த இறக்குமதி செலவுத் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது- மத்திய வங்கி

  • July 14, 2025
  • 0 Comments

2025 மே மாதத்தில் இலங்கையின் மொத்த இறக்குமதி செலவுத் தொகை 1.507 பில்லியன் அமெரிக்க டொலராக குறைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இது ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 179 மில்லியன் டொலர் குறைவாகும். இந்த வீழ்ச்சியானது தனிநபர் வாகன இறக்குமதியில் பெரிதாகக் காணப்படாமல் இருந்த போதிலும், சேவைத் துறையிலுள்ள வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் சில வர்த்தகப் பொருட்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக உருவாகியுள்ளது. தனிநபர் பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதி மதிப்பு மே மாதத்தில் […]