உள்ளூர் முக்கிய செய்திகள்

திட்டமிட்ட வகையில் எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்க முயற்சி செய்கின்றனர்- பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த

  • March 1, 2025
  • 0 Comments

நாட்டில் எரிபொருள் இருப்புக்கு பற்றாக்குறை இல்லை என்று தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார். பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (1) நாடாளுமன்றத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் செயற்கையான எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்க முயற்சிப்பதாக அனில் ஜெயந்த இங்கு சுட்டிக்காட்டினார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மாயம் – நளிந்த ஜயதிஸ்ஸ

  • February 28, 2025
  • 0 Comments

2016 ஆம் ஆண்டு காலம் முதல் பெரும்பாலான விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவற்றில் 14 ஆணைக்குழுக்கள் பிரதானவையாக காணப்படுகின்றன. இவற்றுக்காக 5301 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை. காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அதற்காக 144 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை காணாமலாக்கப்பட்டுள்ளது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (27-02-2025) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வீட்டு உணவுண்ண எனக்கு அனுமதியளிக்கவில்லை சிறைச்சாலை உணவையே உண்டேன் – கலகொட அத்தே ஞானசார தேரர்

  • February 27, 2025
  • 0 Comments

சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் கூட, தனக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக செல்வம் அடைக்கலநாதன் பகிரங்க அறிவிப்பு

  • February 26, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வரவு,செலவுத்திட்டம் சதாரண மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் முன்மொழிவுகளைக் கொண்டிருந்தமையால் அதனை ஆதரிக்கும் தீர்மானத்தினை எடுத்ததாக, ரெலோவின் தலைவரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் விளக்கம் அளித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு, செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று (25-02-2025) நடைபெற்றிருந்த நிலையில் அதனை ஆதரித்து வாக்களித்தமை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை – ஜப்பான் வெளிவிவகார பிரதி அமைச்சர் சந்தித்துள்ளார்

  • February 26, 2025
  • 0 Comments

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் ஜப்பான் வெளிவிவகார பிரதி அமைச்சர் அகிகோ இகுவினாவுக்கும் இடையிலான சந்திப்பு ஜெனீவாவில் இன்று இடம்பெற்றது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ஷ 5 மணிநேரத்தின் பின் சீ.ஐ.டியிலிருந்து வெளியேறினார்

  • February 26, 2025
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். 2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் யு-330 விமானங்கள் 6 மற்றும் யு- 350 விமானங்கள் 8 ஆகியவற்றை கொள்வனவு செய்தமைக்கான எயார்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ இன்று) காலை 09.00 மணியளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். இதன்போது, நாமல் ராஜபக்ஷவிடமிருந்து 5 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ செயற்திட்டத்தின் ஊடாக நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படும்- ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் விஜித்த ஹேரத்

  • February 26, 2025
  • 0 Comments

அரசியலமைப்புக்கு அமைய ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும் நம்பகமான முறையிலும் இயங்கும் என ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளாhர் சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும். இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரிப்பதற்கான ஆணை அக்கட்டமைப்புக்கு வழங்கப்படும். இவ்வாறு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும், நம்பகமான முறையிலும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நாமலை குழிக்கு அனுப்பவுள்ளதாக அரச எம்.பி கூறியுள்ளதால் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் – சாகர காரியவசம்

  • February 25, 2025
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாமல் ராஜபக்ஷவை விரைவில் குழிக்கு அனுப்புவோம் எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த கருத்து நாமல் ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதை காண்பிக்கிறது. ஆளுந்தரப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றமை கவலைக்குரியது. நாமல் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் தொடர் பேராட்டம் சர்வதேச அவதானம் பெற்றுள்ளது ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம்

  • February 25, 2025
  • 0 Comments

இலங்கையில் குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பங்கேற்று அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் என்பவற்றின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்ட அவர்களது கோரிக்கை சர்வதேச அவதானம் பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் நேற்று (24-02-2025) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜேவிபியின் ஆயூதக்கிளர்ச்சியின் போது செய்யப்பட்ட கொலைகளால் நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்

  • February 25, 2025
  • 0 Comments

1989ம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சி தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கமகெதர திசநாயக்கவிற்கும் எதிர்கட்சி உறுப்பினர் ரோகிணி கவிரட்ணவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. முன்னாள் அமைச்சரான தனது தந்தை 1989ம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின் போது 8 பேரை கொலை செய்தார் என தேசியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார் என எதிர்கட்சி உறுப்பினர் ரோகிணி கவிரட்ண தெரிவித்ததை தொடர்ந்து இந்த வாக்குவாதம் இடம்பெற்றது. எனது தந்தை […]