உள்ளூர் முக்கிய செய்திகள்

ஒன்பது மாத சிறைத்தண்டனை பெற்றிருந்த ஞானசார தேரர் பிணையில் விடுதலை

  • February 25, 2025
  • 0 Comments

இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்துள்ளது. ஞானசார தேரர் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றத்திற்காக ஜனவரி 9ம் திகதி நீதிமன்றம் ஞானசார தேரருக்கு ஒன்பது மாதசிறைத்தண்டனையை வழங்கியிருந்தது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

துப்பாக்கிச் சூடுகளும் கைதுகளும் தொடர்கின்றன.

  • February 25, 2025
  • 0 Comments

ஜா – எல, உஸ்வெட்டகெய்யாவ, மோர்கன்வத்த கடற்கரை பகுதியில் கடந்த வியாழக்கிழமை (20-02-2025) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பிரதான துப்பாக்கிதாரி உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, மோர்கன்வத்த கடற்கரை பகுதியில் கடந்த வியாழக்கிழமை இனந்தெரியாத நபர்கள் சிலர் கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை மண்டியிட வைத்து சுட்டுக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். இது தொடர்பில் நீர்கொழும்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தினால் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் மீண்டும்… மீண்டும்… தோல்வியுற்ற தலைவர்கள் இணைந்து 9 கட்சி கூட்டு அமைத்து உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டி

  • February 24, 2025
  • 0 Comments

தமிழ் தேசிய கட்சிகளில் 09 கட்சிகள் ஒன்றாக இணைந்து உள்ளூராட்சி தேர்தலை சங்கு சின்னத்தில் எதிர் கொள்ளவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கட்சி தலைவர்கள் , பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்க கூடிய ஐந்து கட்சிகளும், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம், சமத்துவ கட்சி, […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அரசு மீதான மக்கள் அங்கீகாரம் உயர்ந்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது

  • February 23, 2025
  • 0 Comments

கடந்த வருடம் ஜூலை மாதத்தில் 24 வீதமாக இருந்த அரசு மீதான மக்கள் அங்கீகாரம் 2025 பெப்ரவரியில் 62 வீதம் என்ற உயர் நிலையை அடைந்துள்ளது. இதன் ஊடாக தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் மீது பொது மக்களுக்கு காணப்படும் அங்கீகாரம் அதிகரித்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் முதல் முறையாக மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் 55 வீதம் இலங்கை பொருளாதாரமானது ‘மேம்பட்டுள்ளதாக’ சிந்திக்கின்றனர். எனினும் மக்கள் தொகையில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

புதிய அரசியலமைப்பு நிட்சயம் உருவாக்கப்படுமென அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்

  • February 22, 2025
  • 0 Comments

காலாவதியாகியுள்ள அரசியலமைப்பை இரத்துச் செய்து மக்களின் விருப்பத்துடன், புதிய அரசியலமைப்பை நிச்சயம் உருவாக்குவோம். தேசிய நல்லிணக்கம், ஜனநாயகம் ஆகியவற்றை ஸ்திரப்படுத்துவோம். வழங்கிய வாக்குறுதிக்கு அமைய பயங்கரவாத தடைச்சட்டத்தை வெகுவிரைவில் இரத்துச் செய்வோம் என வெளிவிவகாரம் , வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான 5 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மக்கள் தமது தாய் மொழியில் அரச சேவைகளை பெற்றுக்கொள்வர்- பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

  • February 22, 2025
  • 0 Comments

அரசியல் நிலைமை மற்றும் மொழி ரீதியான பிரச்சினைகள் காரணமாகவே இந்த நாட்டின் இனங்களுக்கு இடையில் சகவாழ்வு இல்லாமல் போயுள்ளது. எனவே முதலில் இனவாதம் அற்ற நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதன் ஊடாக ஒவ்வொரு பிரஜையும் தனது தாய் மொழியில் அரச சேவையை பெற்றுக் கொள்ளும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முஹம்மத் முனீர் முளப்பர் தெரிவித்தார். சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு நேற்று (21-02-2025) மாகும்புர, பன்னிபிட்டியவில் உள்ள தேசிய கல்வி மொழி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

  • February 21, 2025
  • 0 Comments

கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (20-02-2025) கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் இயக்கச்சி பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டவர் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவரிடம் இருந்து 5.660 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் மேலதிக சட்ட […]

முக்கிய செய்திகள்

இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

  • February 20, 2025
  • 0 Comments

பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 20ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்காக சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அவருடைய தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியின் மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைக்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி.

  • February 20, 2025
  • 0 Comments

அரியாலை சிந்துப் பாத்தி மயானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் மனித எச்சங்கள் வெளிவந்த நிலையில் அது குறித்து யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்க விடையம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த மயானத்தில் மனித எச்சங்கள் வெளிவந்தமை தொடர்பில் அறிய கிடைத்ததும் நாங்கள் சென்று பார்வையிட்டோம். அங்கு காணப்பட்ட எச்சங்களை பார்க்கும்போது எங்கிருந்தோ கொண்டு வந்து புதைக்கப்பட்ட எச்சங்களாகப் பாகங்கள் கலக்கப்பட்டவையாகக் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இன்ரர்போலால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இருவர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர்

  • February 20, 2025
  • 0 Comments

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு இந்தியாவிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாகயிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இன்று கொண்டுவரப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொலை, துப்பாக்கிச் சூடு மற்றும் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த இருவரே இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ‘இரத்நாயக்க வீரகோன் அரோஸன் மதுஸங்க’ என்பவரும் மொரட்டுவை […]