முக்கிய செய்திகள்

பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்து என எவ்வாறு கூற முடியும்? என்ற கேள்விக்கு பதிலளிக்காத- அமைச்சர்

  • February 19, 2025
  • 0 Comments

திட்டமிட்டக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட வந்ததாகக்கூறப்படும் ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்பவர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பிரதி அமைச்சர் பதில் அளிக்காமல் பின்வாங்கினார். கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தினுள் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகத்தெரிவித்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ‘கனேமுல்ல சஞ்சீவ’ இன்று முற்பகல் […]

முக்கிய செய்திகள்

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது

  • February 19, 2025
  • 0 Comments

உள்ளுராட்சிமன்ற அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம் சட்டமாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர் அன்றைய தினத்திலிருந்து 52 – 66 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார். பெப்ரல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்இ உள்ளுராட்சிமன்ற அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம்இ சட்டமாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர் தேர்தலை நடத்துவதற்கான முழுமையான அதிகாரம் தேர்தல் […]

முக்கிய செய்திகள்

வடக்கு மாகாணத்திற்கு மேலதிக நிதியை கோரவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்

  • February 18, 2025
  • 0 Comments

எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் முழுமையாகச் செலவு செய்து மேலதிக நிதியை நாம் கோரவேண்டும் என தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வடமாகாணத்திற்கு அதிக நிதி ஒதுக்கியதற்கு ஜனாதிபதிக்கு நன்றிகளையும் தெரிவித்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஆளுநர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவுக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார். அவருக்கு எமது […]

முக்கிய செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

  • February 18, 2025
  • 0 Comments

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்ல […]

முக்கிய செய்திகள்

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிய மகஜர் கையளிப்பு

  • February 18, 2025
  • 0 Comments

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிய 18000 ஆயிரம் பேர்களின் கையெழுத்துக்களுடன் கூடிய மகஜர் அண்மையில் தயாரிக்கப்பட்டது அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச்சங்கம் சேகரித்த 18,000 ஆயிரம் பேர்களின் கையெழுத்துக்களுடனான மகஜர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது  

முக்கிய செய்திகள்

ஜேவிபியும் முன்னர் தேர்தலை பிற்போட ஆதரவளித்துள்ள கட்சி தான் என்கிறார் நாமல் ராஜபகஸ

  • February 18, 2025
  • 0 Comments

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு சார்பானவர்களால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். இவ்வாறான செயற்பாடு அரசாங்கத்துக்கு அழகல்ல, தேர்தலை பிற்போடும் பாவச்செயலுக்கு மக்கள் விடுதலை முன்னணியும் கடந்த காலங்களில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. உள்ளுராட்சிமன்றத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்களும் உள்ளோம். இருப்பினும் தேர்தல் நடவடிக்கைகள் சாதாரண தர பரீட்சைக்கு இடையூறாக அமைய கூடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (17-02-2025) நடைபெற்ற உள்ளூராட்சி அதிகார […]

முக்கிய செய்திகள்

நாட்டில் வளப்பற்றாக்குறை உள்ள போதும் வரவு – செலவுத் திட்டத்தில் யாரையும் புறக்கணிக்கவில்லையென சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்

  • February 18, 2025
  • 0 Comments

மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவோம். அதற்கான திட்டங்களையும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்துள்ளோம். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும் வரவு செலவுத் திட்டத்தில் புறக்கணிக்கவில்லை என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (17-02-2025) நடைபெற்ற அமர்வில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி முன்வைத்தார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்களின் உரிமைகள் […]

முக்கிய செய்திகள்

அம்பாறையில் மதுபானசாலைக்கு எதிராக போராடிய மக்களிடம் சென்ற சுமந்திரனுக்கு நல்லசாத்துப்படி

  • February 16, 2025
  • 0 Comments

அம்பாறை – பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு சென்ற சுமந்திரன் மற்றும் சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்று இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது போராட்டக்காரர்கள் சுமந்திரன் மற்றும் சாணக்கியனை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்திய நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி பெரியநீலாவனை பகுதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், […]

முக்கிய செய்திகள்

இலங்கைத் சமஸ்டி கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் நடைபெறுகின்றது

  • February 16, 2025
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிக் காரியாலயத்தில் தற்போது இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகின்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன்,இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத் உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர். இதன்போது உயிரிழந்த தமிழரதசுக்கட்சி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பதில் தலைவர் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.      

முக்கிய செய்திகள்

கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் தமிழ் கடத்தல்காரரான விக்னேஸ்வரமும் அவரது மனைவியும் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் 

  • February 16, 2025
  • 0 Comments

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் சந்தேகநபர் 30 வயதுடைய புஸ்பராஜ் விக்னேஸ்வரம் என்பவராவார். பல பொலிஸ் நிலையங்களால் விசாரிக்கப்பட்டு வரும் துப்பாக்கிசூட்டு முயற்சி, துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருத்தல் மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபராவார். சந்தேகநபர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு, இலங்கை காவல்துறையினரின் வேண்டுகோளுக்கு […]