முக்கிய செய்திகள்

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம் மீண்டும் இயங்குகின்றது

  • February 15, 2025
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09-02-2025) ஏற்பட்ட மின்தடையால் செயலிழந்த நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்று மின்பிறப்பாக்கி இயந்திரங்களும் திருத்தப்பட்டு மீண்டும் செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கமைய 3 இயந்திரங்களும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடையால், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்தன. இதன் விளைவாக, தேசிய மின்கட்டமைப்பில் 900 மெகாவாட் மின்சாரம் இழக்கப்பட்டது. நிலைமையை முகாமைத்துவம் […]

முக்கிய செய்திகள்

நாட்டில் இன்று பலவீனமான ஆட்சியே உள்ளதென்கிறார் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

  • February 15, 2025
  • 0 Comments

வலுவான அரசாங்கத்திற்கு பதிலாக, வரலாற்றில் மிகவும் தோன்றிய மிகவும் பலவீனமான அரசாங்கமே இங்கு காணப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று (14-02-2025 ) நடைபெற்ற கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கான செயலமர்வு மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் தொகுதி அமைப்பாளர் நியமணப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு என்பவற்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 10 பிரதான விடயங்களை […]

முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ஸவுக்கும்; அமெரிக்க தூதுவருக்குமிடையில் சந்திப்பொன்று இன்று இடம் பெற்றது

  • February 14, 2025
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்துக்கு சென்று கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலில் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமன்ன, சி.பி. ரத்நாயக்க, ஜயந்த கெட்டகொட மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

குரங்கா மந்தியா மின்தடையை ஏற்படுத்தியது என அமைச்சர் பதிலளிக்க வேண்டுமென எதிர்கட்சி தலைவர் பாராளுமன்றத்தில் கோரிக்கை

  • February 14, 2025
  • 0 Comments

கடந்த வாரத்தில் ஏற்பட்டதை போன்று இந்த ஞாயிற்றுக்கிழமையும் நாடு முழுவதும் திடீர் மின் தடை ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக தெரியவருகிறது. அதனால் இதுதொடர்பில் மின்சக்தி அமைச்சர் மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், மின்வெட்டு தொடர்பில் அரசாங்கம் சபைக்கு அறிவிக்க வேண்டும். இந்த ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு இடம்பெறுமா? இங்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் […]

முக்கிய செய்திகள்

வடமாகாணத்திற்கு இரவு தபால் தொடரூந்து சேவை இன்று தொடக்கம் ஆரம்பம்

  • February 14, 2025
  • 0 Comments

வடக்குக்கான இரவு தபால் தொடரூந்து; சேவை இன்று முதல் மொரட்டுவை தொடரூந்து; நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என தொடரூந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையின் உள் விவகா ரங்களில் தலையிடுகின்றார் என சரத் வீரசேகர குற்றச்சாட்டு

  • February 14, 2025
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். போராட்ட காலப்பகுதியிலும் அவர் முறையற்ற வகையில் செயற்பட்டார். அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். இலங்கையில் பிரிவினைவாதத்துக்கு எதிரான கூட்டணியினர் கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் […]

முக்கிய செய்திகள்

ஜேவிபி கட்சிக்க வருடம் 60 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டு வருகின்றதென தயாசிறி தெரிவித்துள்ளார்

  • February 14, 2025
  • 0 Comments

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான தினத்தை அறிவிக்க முன்னர் வரவு – செலவு திட்டம் விவாதம், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் மற்றும் தமிழ் – சிங்கள புத்தாண்டு உள்ளிட்ட காரணிகளை கவனத்தில் கொண்டு தீர்மானமொன்றை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் கூட்டணி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தயாசிறி ஜயசேகர, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் […]

முக்கிய செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி ஏழ்மையான கட்சி என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்

  • February 14, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேர்மறையான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார். ஐ.தே.க. மாத்திரமின்றி சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாகும். எந்த கூட்டணி அமைக்கப்பட்டாலும் சஜித் பிரேமதாசவே அதன் தலைவராவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். நேற்று (13-02-2025) தேர்தல் ஆணைக்குழுவில் விசேட சந்திப்பொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் […]

முக்கிய செய்திகள்

உக்ரைனுக்கு ரஸ்யா அடிப்பதை வேடிக்கை மட்டும் பார்த்த இலங்கைக்கு ரஸ்யா பாராட்டு தெரிவித்துள்ளது

  • February 13, 2025
  • 0 Comments

ரஸ்ய உக்ரைன் யுத்தம் ஆரம்பமாகி மூன்றுவருடங்களாகின்ற நிலையில் இந்த விவகாரத்தில் இலங்கை பின்பற்றிய அணிசேரா கொள்கையை ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன்வரவேற்றுள்ளதுடன் புதிய அரசாங்கமும் இதேகொள்கையை பின்பற்றும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ரஸ்ய ஜனாதிபதிகளிடையிலான பேச்சுவார்த்தை இந்த மோதல் முடிவிற்கு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர் லசந்த படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விடுதலைக்கான பரிந்துரையை சட்டமா அதிபர் ரத்து செய்துள்ளார்

  • February 13, 2025
  • 0 Comments

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு கோரி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைத்த பரிந்துரையை தற்காலிகமாக இரத்து செய்வதாக சட்டமா அதிபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்துக்கு கடிதம் மூலம் இன்று அறிவித்துள்ளார். லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்டமை மற்றும் அவரது குறிப்பேடு காணாமல் போனமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி பரிந்துரை […]