முக்கிய செய்திகள்

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான மூன்று நாள் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி பலவேறு தலைவர்களை சந்திக்கின்றார்

  • February 11, 2025
  • 0 Comments

இன்றைய தினம் ஜனாதிபதி ‘எதிர்கால அரசாங்கங்களின் வடிவம்’ என்ற தொனிப்பொருளில் டுபாயில் நடைபெறும் 2025 உலக அரச மாநாட்டின் முழுமையான அமர்வில் கலந்துகொள்வதோடு, மாநாட்டின் போது முக்கியமான சில இருதரப்பு சந்திப்புகளிலும் கலந்துகொள்ளவுள்ளார். அதன்படி டவ் ஜோன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுடனும் பின்னர் கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவுடனும் இருதரப்பு சந்திப்புக்கள் நடைபெறவுள்ளன. அதேபோல், பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளேயாருடன் சந்திப்பொன்றில் கலந்துகொள்ளவிருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் […]

முக்கிய செய்திகள்

வவுனியாவில் இளைஞர் ஒருவர் 2 கிலோ கஞ்சாவுடன் கைது

  • February 11, 2025
  • 0 Comments

வவுனியா, தோணிக்கல் பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் ஒருவன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த விஜசேகர அவர்களின் ஆலோசனையில், வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களின் வழிநடத்தலில், வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் சிலர் […]

முக்கிய செய்திகள்

காதலர் தினமான எதிர்வரும் 14 ம் திகதி விசேட பாராளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது.

  • February 11, 2025
  • 0 Comments

பிரதமர் ஹரினி அமரசூரியவின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16க்கு அமைய எதிர்வரும் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது. பாராளுமன்றத்தின் இந்த விசேட அமர்வானது சபாநாயகரால் நேற்று (10-02-2025 ) பிரசுரிக்கப்பட்ட 2423ஃ04ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அன்றைய தினம் பாராளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடவிருப்பதுடன், இதில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார். அன்றைய தினம், உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் (விசேட […]

முக்கிய செய்திகள்

நாளை மின்வெட்டு நடைபெறாதென இலங்கை மின்சார சபை அறிவிப்பு

  • February 11, 2025
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பெப்ரவரி பௌர்ணமியை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08-02-2025) ஏற்பட்ட திடீர் மின்வெட்டு காரணமாக நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்த மூன்று மின்னுற்பத்தி இயந்திரங்களையும் மீண்டும் மின்னுற்பத்தி கட்டமைப்பில் இணைப்பதற்கு பல பகுதிகளில் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சாரசபை தீர்மானித்திருந்தது. அதன்படி, நாட்டில் பல பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (10-02-2025) […]

இந்தியா முக்கிய செய்திகள்

 டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி!

  • February 8, 2025
  • 0 Comments

இந்தியாவில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுடில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவியுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவி காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் கடந்த 02ம் திகதி நடைபெற்றது. தலைநகரில் சுமார் 25 ஆண்டுகள், அதாவது கால் நூற்றாண்டுகளுக்குப் பின்பு பாரதிய […]

முக்கிய செய்திகள்

சாணக்கியன் எம்பி நிதி மோசடி செய்தாரா?

  • February 8, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கிருஸ்ணபிள்ளை வதனகுமார் குற்றம்சாட்டியுள்ளார். குளத்தின் நடுவே உள்ள மைதானத்துக்கு இரண்டு தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள ஈழமக்கள் […]

முக்கிய செய்திகள்

சட்டமா அதிபரின் எதேச்சதிகாரப்போக்கிற்தெதிராக கவனயீர்ப்புப்போராட்டம்

  • February 7, 2025
  • 0 Comments

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரை விடுவிப்பதற்குப் பரிந்துரை செய்திருக்கும் சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவுக்கு எதிராக வியாழக்கிழமை (6) நடைபெற்ற கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கலாகப் பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான வழக்கில் கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தினால் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டிருக்கும் பிரேம் ஆனந்த உடலாகம, தொன் திஸ்ஸ சிறி சுகதபால மற்றும் பிரசன்ன நாணயக்கார ஆகிய மூவரையும் அவ்வழக்கிலிருந்து […]

முக்கிய செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் மனைவிக்கு ஐநாவில் முக்கிய பதவி

  • February 6, 2025
  • 0 Comments

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மனைவியை அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தின் இலங்கைக்கான நிரந்திர வதிவிட அலுவலகத்தின் முதன்மை செயலாளராக நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்து. இதற்கான உத்தியோகபூர்வ நியமனத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மறைவுக்கு பின்னர் அமெரிக்காவில் வசித்து வரும் சொனாலி சமரசிங்கவுடன் குறித்த பதவி தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடியுள்ளது. இதனை ஏற்றுக்கொண்டுள்ள அவர் நியூயோர்க்கில் அமைந்துள்ள இலங்கையின் […]

முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர்களை படுகொலைகள் செய்தவர்கள தண்டிக்கப்பட வேண்டுமென யாழ்.ஊடக அமையம் கோரிக்கை

  • February 6, 2025
  • 0 Comments

இலங்கை தீவு முழுவதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஊடக படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தயவு தாட்சணியமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டுமென யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் ஊடகவியலாளர்கள் மீது கொலைகளும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்ட போது திருட்டு மௌனம் காத்திருந்த ஆட்சியாளர்கள் தற்போது லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ள போதும் அதே மௌனத்தை பேணப்போகின்றார்களாவென்ற கேள்வி எழுகின்றது. கடந்த நெருக்கடி […]

முக்கிய செய்திகள்

ஜனாதிபதி எதிர்வரும் 10 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்சிக்கு பயணம்

  • February 6, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டு உலக உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார் என்று அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி […]