முக்கிய செய்திகள்

ஏப்ரல் மாதத்திற்கிடையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தப்படும்- தேர்தல்கள் ஆணைக்குழு

  • January 26, 2025
  • 0 Comments

நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் வைத்து உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க முடியும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது எவ்வாறிருப்பினும் ஏப்ரலுக்குள் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நம்புவதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டு கோரப்பட்ட வேட்புமனுவை இரத்து செய்து 2024ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கமைய புதிய வேட்புமனுவை கோருவதற்கான திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் […]

முக்கிய செய்திகள்

இராஜபக்ஸக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தீவிரமடைந்தால் நாங்கள் அச்சமடைய போவதில்லையென நாமல் தெரிவித்துள்ளார்

  • January 26, 2025
  • 0 Comments

அரசியல் கட்டளைகளை கடினமான முறையில் செயற்படுத்தும் பொலிஸார் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபகஸ தெரிவித்தார். குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமது சகோதரரான யோசித்த ராஜபக்ஸவை நேற்று (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேலுள்ளவாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எனது தம்பியை தங்காலையில் இருந்து கொழும்புக்கு பாதுகாப்பாக அழைத்து […]

முக்கிய செய்திகள்

அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பிலான மனுவை மகிந்த தாக்கல் செய்துள்ளார்

  • January 24, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் அவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். மகிந்த தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளதுடன் மீண்டும் தனது பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 60ஆக அரசாங்கம் குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

துப்பாக்கி சூட்டிற்கு நானும் இலக்காக்கப்படலாம் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

  • January 24, 2025
  • 0 Comments

மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதற்கு பாதுகாப்பு தரப்பினரின் அசமந்த போக்கே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நேற்று (23) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கத்தின் தூய்மையான இலங்கை என்ற திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இந்த திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. முன்னாள் ஜனாதிபதி இல்லம் தொடர்பான தீர்மானம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை […]

முக்கிய செய்திகள்

யாழ். மத்திய கல்லூரியின் தற்போதைய அதிபர் தகுதியற்றவர்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  • January 23, 2025
  • 0 Comments

யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபரொருவர் நியமிக்கப்பட்டார். நியமனம் செய்யப்பட்ட குறித்த அதிபர் சேவைக்குரிய அனைத்து தகுதிகளையும் கொண்டவராக இருக்கின்றார். இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் தலையீட்டால் அவரின் பதவி தடை செய்யப்பட்டது. தற்போது பதில் அதிபராக இருப்பவர் முற்றிலும் தகுதியற்றவர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் அப்போது எதிர்க்கட்சியில் இருந்த தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய அரசியல் தலையீடுகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார். இப்போது அவர் கல்வி அமைச்சராக இருக்கின்றார். […]

முக்கிய செய்திகள்

அரசு சொல்லும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல் மகிந்த அரச வீட்டிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் – அமைச்சர் நளிந்த

  • January 22, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஸஷ நாம் கூறும் வரை காத்திருக்காமல் உடனடியாக அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதே உசிதமானது. அவருக்கு மாத்திரமின்றி ஏனைய சகல முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இது பொறுந்தும். விரைவில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட சகல முன்னாள் ஜனாதிபதிகளதும் உத்தியோகபூர்வ இல்லங்கள் குறித்த மதிப்பாய்வு முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், […]

முக்கிய செய்திகள்

கிளீன் சிறிலங்காவால் நாறுகின்றது பாராளுமன்றம்

  • January 22, 2025
  • 0 Comments

தாஜுதீனையும் லசந்த விக்கிரமதுங்கவையும் கொலை செய்தது நாமல் இராஜபக்ஸ என அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் கிளீன் சிறிலங்கா திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அரசாங்கத்துடன் தர்க்கத்தில் ஈடுபட்டதால் சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் நாமலுக்குமிடையில் இடையில் கடும் தொனிளிலான வாக்குவாதம் நடைப்பபெற்றது பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் நாமல் ராஜபக்ஸ உரையாற்றும்போது தெரிவித்த விடயங்கள் தொடர்பிலே வாக்குவாதம் ஏற்பட்டது. சுபையில் […]

முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அநுரவின் அரசியல் சூனியத்தால் நாடு உலகளாவிய அரசியல் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது- புபுது ஜாகொட

  • January 21, 2025
  • 0 Comments

அரசாங்கம், இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் மூலம் வடகிழக்கு மாகாணங்களை இந்தியாவின் ஆதிக்கத்துக்கு கீழ் கொண்டுவந்துள்ளார் தென் மாகாணத்தின் கீழ் பிரதேசங்களை சீன அரசாங்கத்துக்கு வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த இணக்கப்பாடுகள் மூலம் இலங்கை உலகளாவிய அரசியல் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலி கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளா . ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள […]

முக்கிய செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 2 பேர் உயிரிழப்பு 15 மாவட்டங்கள் பாதிப்பு

  • January 21, 2025
  • 0 Comments

அத்துடன் 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் சீரற்ற வானிலையால் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு விபத்துகளில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நேற்று இரவு மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை பிரதேச செயலகப் பிரிவின் மலபட்டாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வலப்பனையில் இருந்து ஹகுரான்கெத்த […]

முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலைகளில் இன்று கற்பித்தல் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம்

  • January 21, 2025
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் இன்று மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர மேலும் தெரிவித்தார்.