யாழ். மாநகர சபையில் அடிபாடு ஆரம்பம்
யாழ். மாநகர சபையில் இன்று நடைபெற்ற அமர்வில் கடும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. சுகாதார குழுவை தெரிவு செய்வது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இந்த குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதன்போது, மாநகர சபை உறுப்பினர்களுக்கிடையே கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், சபையில் அமர்வு நடந்து கொண்டிருந்த போதே பலர் சபையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரியவருகின்றது.