காணாமல்போனோர் அலுவலகத்தை மக்கள் நம்பும் வகையில் மாற்ற வேண்டும் – தேசிய ஒருமைப்பாட்டிற்கான பிரதியமைச்சர்
காணாமல்போனோர் அலுவலகம் உட்பட தேசிய ஐக்கியம் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான பொறிமுறைகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டிற்கான பிரதியமைச்சர் முனீர்முலாபிர் தெரிவித்துள்ளார். காணாமல்போனோருக்கான அலுவலகம் போன்றவற்றை முன்னைய அரசாங்கம் அரசியல் நியமனங்களிற்காக பயன்படுத்தியது என தெரிவித்துள்ள பிரதியமைச்சர் தற்போதைய அரசாங்கத்தின் இந்த பொறிமுறைகள் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை உண்மையான நோக்கமாக கொண்டு செயற்படும் என குறிப்பிட்டுள்ளார். அனைத்தும் தற்போது மாறிவிட்டன,பத்துவருடங்களிற்கு முன்னர் காணப்பட்ட நிலை தற்போதில்லை,இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் […]