உள்ளூர் முக்கிய செய்திகள்

வாக்காளர் ஒருவருக்கு 74 ரூபா முதல் 160 ரூபா வரை மடடுமே செலவிடலாம்

  • March 27, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்யலாம் என்பதைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு ரூ.74 முதல் ரூ.160 வரை செலவிடலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் 35 வயதுடைய பெண் திடீர் மரணம் காரணம் தெரியவில்லையென வைத்தியர்கள் கைவிரிப்பு

  • March 27, 2025
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்; நிர்வாகச் செயலாளரான சூ.சே. குலநாயகத்தின் மகள் ஆன் சுமங்கலா குலநாயகம் திடீர் சுகவீனம் காரணமாக நேற்று உயிரிழந்தார் யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் இருந்த வேளை திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மரணத்துக்கான காரணத்தை அறிய முடியும் என வைத்தியசாலை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளன.

உள்ளூர் முக்கிய செய்திகள்

காலனித்துவ ஆட்சியில்இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு மன்னிப்பு கேட்காத பிரிட்டன் எனக்கெதிராக தடைகளை விதிப்பது விசித்திரம் – வசந்த கரனாகொட

  • March 27, 2025
  • 0 Comments

இலங்கையிலும் இந்தியாவிலும் பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியாளர்கள் இழைத்த அநீதிகள் அட்டுழியங்களிற்கு இன்னமும் நீதி வழங்கப்படாத நிலையில் பிரிட்டன் இலங்கைக்கு எதிராக மனித உரிமைதடைகளை விதிக்கின்றது என பிரிட்டன் தடைவிதித்துள்ள நால்வரில் ஒருவரான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட தெரிவித்துள்ளார். பிரிட்டன் தனது கடந்தகால செயற்பாடுகளிற்காக மன்னிப்பு கோரவில்லை என தெரிவித்துள்ள அவர் காசா சிரியா ஆப்கானிஸ்தான் லிபியா போன்ற பகுதிகளில் இடம்பெறும் விடயங்கள் குறித்து ஏன் பிரிட்டன் மௌனமாக உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்கா […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பிரிட்டனின் தடைக்குப் பின்னால் கனேடிய நீதியமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி உள்ளதாக தயான் ஜயதிலக்க குற்றச்சாட்டு

  • March 26, 2025
  • 0 Comments

நாட்டின் பாதுகாப்பு முன்னாள் பிரதானிகளுக்கு பிரித்தானியா தடை விதித்ததன் பின்னணியில் கனடா மற்றும் அந்த நாட்டின் நீதியமைச்சர் கெரி ஆனந்த சங்கரியின் அழுத்தம் காணப்படுவதாக முன்னாள் சிரேஸ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என குற்றம் சுமத்தி நான்கு இலங்கையர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான ஜெனரால் சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜயசூரிய, கடற்படை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தேசபந்து தென்னகோனை பதவி நீக்கும் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது

  • March 25, 2025
  • 0 Comments

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக பிரதியமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார். தேசபந்து தென்னகோன் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வியாழேந்திரனை கைது செய்தது

  • March 25, 2025
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வியாழேந்திரனை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்த குற்றத்திற்கே சவேந்திர டி சில்வாவுக்கு தடை விதிக்கப்பட்டது

  • March 25, 2025
  • 0 Comments

சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யவேண்டும் என உத்தரவிட்டவர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டங்களில் 58 வது படையணியின் தளபதியாக விளங்கிய சவேந்திர சில்வா என பிரிட்டன் தெரிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதிகள் கடற்படை தளபதி மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் மீதான தடைகளிற்கான காரணங்களை தெளிவுபடுத்தும் ஆவணமே இவ்வாறு தெரிவித்துள்ளது. சவேந்திர சில்வா சவேந்திர சில்வா தனிநபரின் வாழ்வதற்கான உரிமை , சித்திரவதைக்கு உட்படுத்தப்படாமலிருப்பதற்கான உரிமை, ஈவிரக்கமற்ற,அல்லது மனிதாபிமானற்ற விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,இழிவான விதத்தில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் தளபதிகளுக்கான பிரிட்டனின் தடையை கனடாவின் நீதியமைச்சரான ஹரி சங்கரி வரவேற்றுள்ளார்

  • March 25, 2025
  • 0 Comments

இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில்அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன் . இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது. 2023 இல் கனடா மகிந்த ராஜபக்ச கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து பிரிட்டனும் தடைகளை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கொழும்பில் இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட மோதலுக்கும் மஹிந்தவின் புத்தாவுக்கும் தொடர்பில்லை- பொலிஸார்

  • March 24, 2025
  • 0 Comments

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு யோசிதத ராஜபக்ஸ மற்றும் அவரது மனைவி மற்றும் குழுவினருடன் சென்றுள்ளார் இதன்போது, இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் யோசித ராஜபக்ஸவுடன் சென்ற குழுவுக்கும் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலின் போது யோசிதத ராஜபக்ஸவுடன் சென்ற குழுவினர் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். இந்த மோதல் இரவு நேர களியாட்ட […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் நால்வருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது

  • March 22, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கே மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவர், ரி-56 ரக துப்பாக்கியால் அந்த பகுதியில் இயங்கிவந்த ஆயுதக்குழு ஒன்றைச் சேர்ந்தவர்களால் சுட்டு கொல்லப்பட்டார். […]