உள்ளூர் முக்கிய செய்திகள்

சட்டவிரோத தையிட்டி விகாரை கட்டிடத்தை அகற்றுமாறு போராட்டம்

  • September 7, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுமானத்தை அகற்றுமாறு வலியுறுத்தி ஒவ்வொரு மாதமும் பூரணை தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்றைய தினமும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாதாள உலக கோஷ்டி கொழும்புக்கு இழுத்துவரப்பட்டனர்

  • August 30, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக கோஷ்டி இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவரகள்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுவட்டாரத்தில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

உள்ளூர்

யாழ் செம்மணியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன

  • August 29, 2025
  • 0 Comments

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் இதுவரை மொத்தம் 187 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 174 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 37வது நாளாக தொடர்ந்தன. இந்த பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.

உள்ளூர்

எதிர்க்கட்சியினரின் AKD கோ கோம் போராட்டம் நேற்று ஆரம்பம்

  • August 27, 2025
  • 0 Comments

கொழும்பில் எதிர்க்கட்சி நடத்திய போராட்டத்தில் ஒருவர் பொலிஸ் அதிகாரி காயமடைந்தார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகம் அருகே நேற்று (26-08) பிற்பகல் பெரிய மக்கள் கூட்டம் திரண்டது. இதனால் அப்பகுதியில் பல சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ‘ஒடுக்குமுறைக்கு எதிராக’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக சிறையில் வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அரசின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இந்நாள் பிரதமர் முன்னாள் ஜனாதிபதியை பார்க்கவில்லை.

  • August 26, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்த்ரீ விக்ரமசிங்க உடன் நேற்று (25-08) அதிகாலை நேரத்தில் சந்தித்ததாக பரவிய செய்திகளை பிரதமரின் அலுவலகம் முற்றிலும் மறுத்துள்ளது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் ஹர்த்தாலின் போது மட்டு மேயர் மிரட்டப்பட்டாரா?

  • August 21, 2025
  • 0 Comments

மட்டக்களப்பில் ஹர்த்தாலின் போது மாநகர சபை முதல்வரை அவமதிப்பதாக திட்டமிட்ட நடவடிக்கைகள் நடைபெற்றதற்கான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகர சபை உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியினரைக் குற்றஞ்சாட்டியுள்ளனர். மட்டக்களப்பில் ஹர்த்தால் காரணமாக மாநகர சபை முதல்வரை அவமதிப்பதாக திட்டமிட்ட நடவடிக்கைகள் நடைபெற்றதற்கான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகர சபை உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியினரைக் குற்றஞ்சாட்டியுள்ளனர். இன்றைய  மாநகர சபை அமர்வில், முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் சபை நடைமுறைகளில் அனைத்து முன்மொழிவுகளும் வாசிக்கப்பட்டு, அனுமதிகள் வழங்கப்பட்டன. உறுப்பினர் […]

உள்ளூர்

இலங்கைக்கு ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஐநா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்

  • August 14, 2025
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க், இலங்கையின் கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்கள் தொடர்பான அரசாங்கத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குறித்த பொறுப்பை நீண்டகாலமாக ஏற்க மறுத்துள்ளதை கண்டித்து, ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வதை வலியுறுத்தியுள்ளார். அதன் மூலம், இராணுவத்தினால் பிடிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல், புதிய நிலக் கையகப்படுத்துதல்களை நிறுத்தல், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை விடுவித்தல், பாதிக்கப்பட்டவர்களின் நினைவு முயற்சிகளை ஆதரித்தல், காணாமல் போனவர்கள் […]

உள்ளூர்

மகிந்தவுக்கு தமது சொந்த வீடுகளை அறுதியுறுதியோடு வழங்க காத்திருக்கும் சிங்கள மக்கள்

  • August 4, 2025
  • 0 Comments

உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்சவை வெளியேற்றினால் பெரும்பாலான மக்கள் உறுதிப்பத்திரங்களுடன் அவருக்கு வீடுகளை வழங்க காத்திருக்கின்றார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் வகையில் சட்டமூலம் ஒன்று வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதியான […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசர் உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தெரிவு

  • July 22, 2025
  • 0 Comments

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை அது பரிசீலனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. தற்போதைய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஜூலை 27ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ளார். அவர் ஜூலை 25ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் பிரியாவிடை உரை ஆற்றவுள்ளார். நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினராக செயல்பட்டதுடன், பல […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இஸ்ரேலில் இலங்கை இளைஞர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து முற்றிலுமாக தீக்கிரை ஒருவர் காயம்

  • July 19, 2025
  • 0 Comments

இந்த சம்பவம் முசைலயவ ஆயடயமா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18-07) காலை இடம்பெற்றது என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். விபத்து நேரத்தின் போது பேருந்தில் 20 இலங்கையர்கள் பயணித்துள்ளனர். தீ பரவிய வேளையில், பேருந்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால், பயணிகள் ஜன்னல்களை உடைத்து வெளியேறியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் மட்டும் காயமடைந்துள்ளார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது நிலைமை கவலைக்கிடமல்ல எனத் தெரிவிக்கப்பட்டது. விபத்துடன் தொடர்புடைய நிறுவனம் செயற்பாடுகளை […]