குரங்கா மந்தியா மின்தடையை ஏற்படுத்தியது என அமைச்சர் பதிலளிக்க வேண்டுமென எதிர்கட்சி தலைவர் பாராளுமன்றத்தில் கோரிக்கை
கடந்த வாரத்தில் ஏற்பட்டதை போன்று இந்த ஞாயிற்றுக்கிழமையும் நாடு முழுவதும் திடீர் மின் தடை ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக தெரியவருகிறது. அதனால் இதுதொடர்பில் மின்சக்தி அமைச்சர் மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், மின்வெட்டு தொடர்பில் அரசாங்கம் சபைக்கு அறிவிக்க வேண்டும். இந்த ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு இடம்பெறுமா? இங்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் […]