முக்கிய செய்திகள்

திருகோணமலை கடலில் மீனவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகித்துள்ளனர்

  • January 27, 2025
  • 0 Comments

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரம் கடலுக்கு கடற்தொழிலுக்கு சென்று காணாமல் போயிருந்த மீனவரின் சடலம் இன்று (27) காலை மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சடலத்தை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஸான் இன்று சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவுட்டுள்ளார் நேற்று (26-01-2025) ஞாயிற்றுக்கிழமை பகல் வள்ளமொன்றில் ; மீன்பிடிக்கச் சென்ற இலங்கைத்துறை முகத்துவாரத்தைச் சேர்ந்த 53 […]

முக்கிய செய்திகள்

சிவப்பு அரிசி மற்றும் தேங்காய் விலை தொடர்பில் என்ன நடைபெறுகின்றதென பொறுத்திருந்து பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

  • January 27, 2025
  • 0 Comments

காலி, கட்டுஹெம்பலாவில் உள்ள மறைந்த மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் வீட்டிற்கு நேற்று (26) காலை சென்றிருந்த போதே அவர் மேலுள்ளவாறு தெரிவித்துள்ளார். அங்கு மறைந்த மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இதன்போது சிவப்பு அரிசி தட்டுப்பாடு மற்றும் தேங்காய் விலை அதிகரிப்பு குறித்து கவலைகளை தெரிவித்ததோடு, ஒரு தேங்காய் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ரணில் இவ்வாறு தெரிவித்த போது கடந்த முறை 10 கிலோ சிவப்பு அரிசியை வழங்கியவர் […]

முக்கிய செய்திகள்

2025 வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக் அடிப்படை சம்பளம் உயர்த்தப்படும்

  • January 27, 2025
  • 0 Comments

பொதுமக்களின் உரிமை என்ற வகையிலும் அரச ஊழியர்களின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அனுராதபுர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். தற்போதுள்ள அரச சேவையில் பிரஜைகள் திருப்தியடையவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்க சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக பிரஜைகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்க உள்ளதாக தெரிவித்தார். […]

முக்கிய செய்திகள்

கிளிநொச்சி கடலிலும் இந்திய மீனவர்களின் கடலழிப்பு தொடர்கின்றது

  • January 27, 2025
  • 0 Comments

கிளிநொச்சி இரணைதீவுக்கு அன்மித்த கடற்பகுதியில் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறையில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (26) நேற்று அதிகாலை 2 மணியளவில் இரணைதீவிற்கு அன்மித்த கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட மூன்று இந்திய இழுவைப்படகுகளையும் அதிலிருந்த 33 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர் இவ்வாறு கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்களும் கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் […]

முக்கிய செய்திகள்

சீ.ஐ.டி மற்றும் பொலிஸாரின் விசாரணைகளில் அரசு தலையிடாதென ஜனாதிபதி தெரிவிப்பு

  • January 26, 2025
  • 0 Comments

யாதொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாத போதும் விசாரணைகளை மேற்கொள்பவர்களை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம – பிட்டிபன பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கடந்த 9 வருடங்களாக மறைக்கப்பட்டிருந்த கோவைகள் தூசி தட்டி திறக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாப தெரிவித்துள்ளார் அரசாங்கம் எந்தவொரு நபர்களையோ, வழக்குகளையோ தெரிவு செய்வதில்லையெனவும் உரிய வகையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாத்திரமே சட்ட […]

முக்கிய செய்திகள்

ஏப்ரல் மாதத்திற்கிடையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தப்படும்- தேர்தல்கள் ஆணைக்குழு

  • January 26, 2025
  • 0 Comments

நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் வைத்து உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க முடியும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது எவ்வாறிருப்பினும் ஏப்ரலுக்குள் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நம்புவதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டு கோரப்பட்ட வேட்புமனுவை இரத்து செய்து 2024ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கமைய புதிய வேட்புமனுவை கோருவதற்கான திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் […]

முக்கிய செய்திகள்

ஸ்தரமான எதிர்கட்சிக்காக ரணில், சஜித் தரப்புக்களின் இணைவு சாத்தியம்

  • January 24, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்குமிடையிலான பேச்சுவார்த்தையொன்று அண்மையில் நடைப்பபெற்றுள்ளது. இரு கட்சிகளினதும் பொதுச் செயலாளர்களுக்கிடையிலான இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் கடந்த 18ஆம் திகதி அது குறித்த பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அத்தோடு கடந்த 20ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது இந்நிலையிலேயே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை […]

முக்கிய செய்திகள்

துப்பாக்கி சூட்டிற்கு நானும் இலக்காக்கப்படலாம் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

  • January 24, 2025
  • 0 Comments

மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதற்கு பாதுகாப்பு தரப்பினரின் அசமந்த போக்கே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நேற்று (23) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கத்தின் தூய்மையான இலங்கை என்ற திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இந்த திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. முன்னாள் ஜனாதிபதி இல்லம் தொடர்பான தீர்மானம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை […]

முக்கிய செய்திகள்

யாழ். மத்திய கல்லூரியின் தற்போதைய அதிபர் தகுதியற்றவர்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  • January 23, 2025
  • 0 Comments

யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபரொருவர் நியமிக்கப்பட்டார். நியமனம் செய்யப்பட்ட குறித்த அதிபர் சேவைக்குரிய அனைத்து தகுதிகளையும் கொண்டவராக இருக்கின்றார். இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் தலையீட்டால் அவரின் பதவி தடை செய்யப்பட்டது. தற்போது பதில் அதிபராக இருப்பவர் முற்றிலும் தகுதியற்றவர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் அப்போது எதிர்க்கட்சியில் இருந்த தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய அரசியல் தலையீடுகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார். இப்போது அவர் கல்வி அமைச்சராக இருக்கின்றார். […]

முக்கிய செய்திகள்

மேல் தட்டில் உள்ள பொருளாதாரத்தை கீழ் மட்டத்திலிருக்கும் மக்களுக்கு நகர்த்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

  • January 22, 2025
  • 0 Comments

நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முதற்கட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். செயற்திறனுடனும் திறமையாகவும் பொருளாதார செயல்முறையை கையாள்கையில் பொதுவான புழக்க முறையொன்றினை நிறுவுவதன் முக்கியத்துவம் […]