இலங்கையில் பாடசாலை மாணவிகள் கர்ப்பம் தரிப்பது அதிகமாகின்றது- மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்
பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிக்கும் நிலைமை அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (18-07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போது, பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதம் மற்றும் அவர்கள் தாய்மாராகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தார். இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, கல்வி அமைச்சுடன் இணைந்து இளம்பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வை வழங்கும் […]