முக்கிய செய்திகள்

அரசு சொல்லும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல் மகிந்த அரச வீட்டிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் – அமைச்சர் நளிந்த

  • January 22, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஸஷ நாம் கூறும் வரை காத்திருக்காமல் உடனடியாக அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதே உசிதமானது. அவருக்கு மாத்திரமின்றி ஏனைய சகல முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இது பொறுந்தும். விரைவில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட சகல முன்னாள் ஜனாதிபதிகளதும் உத்தியோகபூர்வ இல்லங்கள் குறித்த மதிப்பாய்வு முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், […]

முக்கிய செய்திகள்

கிளீன் சிறிலங்காவால் நாறுகின்றது பாராளுமன்றம்

  • January 22, 2025
  • 0 Comments

தாஜுதீனையும் லசந்த விக்கிரமதுங்கவையும் கொலை செய்தது நாமல் இராஜபக்ஸ என அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் கிளீன் சிறிலங்கா திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அரசாங்கத்துடன் தர்க்கத்தில் ஈடுபட்டதால் சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் நாமலுக்குமிடையில் இடையில் கடும் தொனிளிலான வாக்குவாதம் நடைப்பபெற்றது பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் நாமல் ராஜபக்ஸ உரையாற்றும்போது தெரிவித்த விடயங்கள் தொடர்பிலே வாக்குவாதம் ஏற்பட்டது. சுபையில் […]

முக்கிய செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 2 பேர் உயிரிழப்பு 15 மாவட்டங்கள் பாதிப்பு

  • January 21, 2025
  • 0 Comments

அத்துடன் 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் சீரற்ற வானிலையால் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு விபத்துகளில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நேற்று இரவு மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை பிரதேச செயலகப் பிரிவின் மலபட்டாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வலப்பனையில் இருந்து ஹகுரான்கெத்த […]

முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலைகளில் இன்று கற்பித்தல் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம்

  • January 21, 2025
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் இன்று மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐ.தே.க. பேச்சுவர்த்தையில் ஈடுபடவுள்ளது

  • January 21, 2025
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க கட்சியின் செயற்குழு பூரண அனுமதியை வழங்கியுள்ளது. கலந்துரையாடல்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (20) இடம்பெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் […]

முக்கிய செய்திகள்

மன்னாரில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு

  • January 20, 2025
  • 0 Comments

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு தொடரூந்து கடவைக்கருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று (20) மீட்கப்பட்டுள்ளது. தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்தில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த பெண் மன்னார் ஜீவபுரம் பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக தோட்டக்காடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

நெல் களஞ்சியசாலைகளை இராணுவத்தினர் சுத்தப்படுத்துகின்றனர்

  • January 19, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆலோசனைக்கமைய நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ‘தூய இலங்கை’ தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதுடன் நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகள் மற்றும் சுற்றியுள்ள நிலம் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அவற்றைப் […]

முக்கிய செய்திகள்

கிளிநொச்சியின் உடனடி தேவையென சில விடங்களை குறிப்பிட்டு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம்

  • January 18, 2025
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.ஸ்டீவென்சன் இக்கடிதத்தை அனுப்பிய பின்னர் ஊடகங்களுக்கு அதனை வெளியிட்டுள்ளார். அக் கடிதத்தில் இவ்வாறு உள்ளது கிளிநொச்சி மாவட்டம் யுத்தத்தினால் நலிவடைந்து வளர்ந்துவரும் மாவட்டம் என்பது தாங்கள் அறிந்ததே. இம்மாவட்டத்தின் நகர அபிவிருத்தியில் உடனடியாக செய்து கொடுக்கவேண்டிய விடயங்களை தங்களிடம் முன்வைக்கிறோம். 1. கிளிநொச்சியில் பரந்தன் சந்தி, டிப்போ சந்தி, கரடிபோக்கு […]

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த பாரம்பரிய விவசாயிகள்

  • January 18, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் அறுவடை செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்பட்ட நிலையில் குறித்த திகதிக்கு முன்னர் முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சில செல்வந்த விவசாயிகளுக்கு நெல் அறுவடை செய்ய அரசாங்க அதிபர் அனுமதி வழங்கியதால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் அரசாங்க அதிபரின் இவ்வாறான தான்தோன்றித்தனமான செயற்பாட்டை கண்டித்து விவசாயிகள் ,அவருக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று (17) முறைப்பாடு செய்துள்ளனர். மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழு காரியாலத்திற்கு சில விவசாயிகள் […]

முக்கிய செய்திகள்

யாழ் வந்த சந்தோஸ்ஜா யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார்

  • January 18, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ்ஜா அரசியல் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு (17) இரவு விருந்துடன் இச்சந்திப்பு இடம்பெற்றது. இந்த ஒன்றுகூடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கருணநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், சிறீபவானந்தராஜா முதலானோர் கலந்துகொண்டனர். யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் அர்ச்சுனா ஆகியோர் இதில் கலந்துக்கொள்ளவில்லை. […]