உள்ளூர் முக்கிய செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் திணைக்களம் தயாராகவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு

  • April 28, 2025
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றம் செய்து தரவேண்டும். நாம் இதற்காக தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் தெரிவித்தார். முன்னை பாராளுமன்றத்தில் முன்னாள் எம்.பி. சுமந்திரன் கொண்டுவந்த தனி நபர் பிரேரணை போன்ற ஒன்றை தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொண்டு வந்து அதனை நிறைவேற்றினால் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தல் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

  • April 25, 2025
  • 0 Comments

கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு கடுமையான மின்னல் தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் மூலம் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. மின்னல் மற்றும் இடி ஏற்படும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் இன்றுவரை 429 முறைப்பாடுகள் பதிவு!

  • April 24, 2025
  • 0 Comments

2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த மார்ச் 03 முதல் ஏப்ரல் 24 வரை, தேர்தல் தொடர்பான மொத்தம் 429 முறைப்பாடுகளை இலங்கை பொலிஸார் பெற்றுள்ளனர். இந்த முறைப்பாடுகளில் 61 தேர்தல் வன்முறை தொடர்பானவை மற்றும் 222 தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தக் காலகட்டத்தில், 25 வேட்பாளர்களும் 98 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், 23 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கிடையில், இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி […]

உள்ளூர்

ஈஸ்ட்டர் தாக்குதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய பொலிஸ் குழு நியமனம்

  • April 22, 2025
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் நால்வர் கொண்ட பொலிஸ் குழுவொன்றை நியமித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மானதுங்க தெரிவித்துள்ளார். சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட இந்த குழுவிற்கு தலைமைதாங்குகின்றார்.சிஐடிக்கு பொறுப்பான பிரதிபொலிஸ்மா அதிபர்,சிஐடியின் இயக்குநர், பயங்கரவாத விசாரணை பிரிவின் இயக்குநர் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். பிரதான குழுவின் கீழ் மேலும் பல குழுக்களை உருவாக்கியுள்ளோம் பிரதான குழு ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்கனவே ஆராய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வனவள அதிகாரி துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார்- சத்தியலிங்கம் எம்பி

  • April 21, 2025
  • 0 Comments

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் மக்களின் சொந்த காணிகளை எல்லையிட வந்த வனவள அதிகாரி ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக்கட்சியின் பிரதேச தேர்தல்காரியாலயம் வவுனியா மாகறம்பைக்குளம் பிரதான வீதியில் திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் இலங்கை தமிழரசுக்கட்சி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இது ஒரு எல்லைப்புற […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசாங்கம் அரசியல் இலாபமீட்டுவதற்காக பயன்படுத்துகின்றது – நாமல்

  • April 21, 2025
  • 0 Comments

உள்ளுராட்சி தேர்தலிற்கு முன்பாக அரசியல் இலாபமீட்டுவதற்காக அரசாங்கம் உயிர்த்தஞாயிறு தாக்குதலை பயன்படுத்துகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். அரசாங்கம் தேசிய துன்பியல் நிகழ்வை உணர்ச்சிபூர்வமான பதில்களை தூண்டவும்,பொதுமக்களின் உணர்வுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தவும் கையாள்கின்றது என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அப்போதைய ஜனாதிபதியின் உத்தரவிற்கு ஏற்ப 2021 பெப்பிரவரி 23ம் திகதி நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டது என தெரிவித்துள்ள […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கருணா, பிள்ளையான் கொல்லப்படும் நானே புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சியடையும் நாளாகும். – ராஜித சேனாரத்ன

  • April 20, 2025
  • 0 Comments

புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமெனில் கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் தண்டிக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் அரங்கேற்றியிருக்கும் நாடகமே பிள்ளையானின் கைதாகும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். களுத்துறை பிரதேசத்தில் சனிக்கிழமை (19-04) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் வெளியேறியதால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்ச்சியடைந்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் எந்தவொரு […]

உள்ளூர்

நிகழ்நிலை காப்பு சட்ட மாற்றீடு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

  • April 18, 2025
  • 0 Comments

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நிகழ்நிலை காப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பான ஏதேனும் விதிமுறைகள் நடைமுறையிலிருந்தால், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அந்த விதிமுறைகள் அனைத்தும் ரத்தாகும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டமூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் தனிநபர் சட்டமூலமாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 127 முறைப்பாடுகள் பதிவு!

  • April 15, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 159 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 127 முறைப்பாடுகளும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 32 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.                                         […]

உள்ளூர்

விவசாய காணி பிரச்சினையை விரைவில் தீர்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதி

  • April 13, 2025
  • 0 Comments

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அக்கரைப்பற்று பகுதியில் நேற்று முன்தினம் (11-04) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தோல்வியுற்ற அரசியல் தரப்பினர் மக்களிடம் பிளவை ஏற்படுத்துவதற்கு விளைகின்றனர். கடந்த காலங்களில் திகன, அக்குரணை, அளுத்கம உள்ளிட்ட பகுதிகளில் முரண்பாடு ஏற்பட்டதுடன் பல வழிபாட்டு ஸ்தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் எதிர்வரும் காலங்களில் மீண்டும் அவ்வாறு இடம்பெறுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என உறுதியளிப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, […]