எதிர்க்கட்சியிலிருந்த போது போராட்டங்களையும் முன்னெடுத்தவர்கள் ஆட்சிக்கு வந்ததும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கின்றார்கள்- சஜித் பிரேமதாஸ
எதிர்க்கட்சியில் இருந்த போது போராட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் முன்னெடுத்த இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் போராட்டங்களை விரட்டியடித்து தாக்க ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட வேட்பாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்நாட்டு மக்கள் தமது ஆணையால் ஜனாதிபதியை நியமித்தும், 2ஃ3 பாராளுமன்ற அதிகாரத்தையும் வழங்கி தமது […]