உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கைப் கடவுச்சீட்டு உலக தரவரிசையில் ஆறு இடங்கள் வீழ்ச்சி

  • September 17, 2025
  • 0 Comments

சர்வதேச ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் 2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தரவரிசை செப்டம்பர் 11ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதில் இலங்கைப் பாஸ்போர்ட் 97ஆம் இடத்திற்குத் தாழ்ந்துள்ளது. இவ்வருடம் தொடக்கத்தில் இலங்கை சிறப்பான முன்னேற்றம் கண்டிருந்தது. 2024ஆம் ஆண்டு 96ஆம் இடத்தில் இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் 91ஆம் இடத்துக்கு முன்னேறியது. ஆனால் சமீபத்திய தரவரிசையில் மீண்டும் வீழ்ச்சி அடைந்து, 2024இல் இருந்ததை விடவும் ஒரு இடம் கீழான 97ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது இலங்கைப் பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு […]

உள்ளூர்

யாழ். மாநகர சபையில் அடிபாடு ஆரம்பம்

  • June 27, 2025
  • 0 Comments

யாழ். மாநகர சபையில் இன்று நடைபெற்ற அமர்வில் கடும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. சுகாதார குழுவை தெரிவு செய்வது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இந்த குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதன்போது, மாநகர சபை உறுப்பினர்களுக்கிடையே கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், சபையில் அமர்வு நடந்து கொண்டிருந்த போதே பலர் சபையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

உள்ளூர்

நிதி மோசடி வழக்கில் மகிந்த மகன் நாமலின் வழக்கு செப்டெம்பர்; வரை பிற்போடப்பட்டுள்ளது

  • June 27, 2025
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான மோசடி வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26 திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டுள்ளது. றக்பி விளையாட்டை மேம்படுத்த கிரிஷ் நிறுவனம் கொடுத்ததாக கூறப்படும் 70 மில்லியன் ரூபா பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த […]

உள்ளூர்

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு ஜுலை மாதம் 2ஆம் திகதி வரை ஆபத்தில்லை

  • June 26, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பதவி தொடர்பான வழக்கு ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்றையதினம் (26.06.2025) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதன்போதே, வழக்கை ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஈபிடிபி, தமிழரசுக் கட்சி சந்திப்பிற்கு கிழக்கிலும் கடும் எதிர்ப்பு

  • June 6, 2025
  • 0 Comments

டக்ளஸ் – சிவஞானம் சந்திப்பை வன்மையாக கண்டிப்பதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும், இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் எமது தமிழ்த் தேசியக் கொள்கைக்கு விரோதமாக செயற்பட முடியாது. தமிழ்த் தேசியத் தலைவரின் கொள்கைக்கு எதிர்ப்பாக ஒருபோதும் நாம் செயற்படப் போவதுமில்லை. இது திண்ணம். கட்சியின் உயர்மட்டக் குழுவின் (மத்தியகுழு) அனுமதியில்லாமல் தனிப்பட்ட முடிவுகள் […]

உள்ளூர்

வவுனியாவில் இரத்தக்கறைகளுடன் இளம் குடும்பஸ்த்தாரின் சடலம் மீட்பு

  • June 4, 2025
  • 0 Comments

வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் உள்ள வீடொன்றிலிருந்து இரத்தக்கறைகளுடன் இளம் தந்தை ஒருவரின் சடலத்தை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். வீடொன்றில் இளைஞன் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு, விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வவுனியா காத்தார்சின்னக்குளத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சடலமாக மீட்கப்பட்டவர் நேற்று செவ்வாய்க்கிழமை (03) மாலை இளைஞர் குழுவொன்றுடன் […]

உள்ளூர்

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

  • June 3, 2025
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர் கே.டி.எம்.யு. ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மின்சார சபையின் கடிதத் தலைப்பின் கீழ் இந்த நியமனம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் வலுசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆவார். இதற்கிடையில், இலங்கை மின்சார சபையின் தலைவராக இதுவரை பணியாற்றி வந்த பொறியியலாளர் கலாநிதி டி.ஜே.டி. சியம்பலாபிட்டியவின் ராஜினாமா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்>ஜனாதிபதி அநுரவுக்கு அவசர தந்தி அனுப்பிய டக்ளஸ்! […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

விபத்தில் மரணமடைந்த இந்திய தூதரக அதிகாரியின் மகனும் உயிரிழப்பு

  • June 2, 2025
  • 0 Comments

வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் சமீபத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த இளைஞர் சிகிச்சைப் பலன் இன்றி நேற்றிரவு 8 மணிக்கு உயிரிழந்துள்ளார். கடந்த மே மாதம் 26ஆம் திகதி காலை இடம்பெற்ற கனரக வாகனம் – கார் மோதிய கோர விபத்தில் யாழ். இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார். இந்த விபத்தில் அவரின் மனைவி (சீதாலக்ஷ்மி – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்), மகன் மற்றும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது

  • June 1, 2025
  • 0 Comments

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 19 நிர்வாக மாவட்டங்களுக்குரிய உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளின் மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைஆகியவற்றுக்கான உறுப்பினர் நியமனத்தை உறுதிப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை பிரசுரித்துள்ளது. (262 ஆம் பிரிவு) உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல் வாக்கெடுப்பு கட்டளைச் சட்டத்தின் 66 (2) அத்தியாயத்தின் கீழ் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு சனிக்கிழமை (31) பிரசுரித்துள்ளது. பிரசுரிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் நிர்வாக மாவட்டத்தில் உள்ள,ஒவ்வொரு தொகுதிகளுக்காக தெரிவு […]

உள்ளூர்

புலம்பெயர் தமிழர்கள் வீசாவையும் வர்த்தகங்களையும் பாதுகாப்பதற்கு மீண்டும் யுத்தம் ஏற்படும் என்கிறார்கள்- சரத் பொன்சேக்கா

  • May 29, 2025
  • 0 Comments

நாட்டில் அனைவரும் அமைதிக்காகவே யுத்தத்தில் ஈடுபட்டதாக தேசிய போர் வீரர் தினத்தன்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்த கருத்துடன் என்னால் உடன்பட முடியாது. பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? வடக்கு, கிழக்கில் முகாம்கள் அகற்றப்படுகின்றன என்றால் அதன் ஊடாக எதிர்மறையான பிரதிபலன்களே கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்தம் நிறைவடைந்தமை தொடர்பில் எமக்கு பெரு […]