இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதனை உடன நிறுத்தவேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள்
இலங்கை அதிகாரிகள் விசாரணைகளுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் பரந்த அதிகாரங்களை தற்போது நாடுகின்றார்கள் மற்றும்; துஸ்பிரயோகம் செய்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதிக்கவேண்டும், என வேண்டுகோள்விடுத்துள்ளது. நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிராந்திய இயக்குநர் ஸ்மிரிதி சிங் இதனை தெரிவித்துள்ளார் பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. சர்வதேச மன்னிப்புச்சபை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டியதன் அவசியம் குறித்து பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. […]