உள்ளூர்

ஜனாதிபதி அநுரவின் 22 வாக்குறுதிகளில் ஒன்றே முழுமையாக நிறைவேற்றம் – வெரிட்டே ஆய்வு

  • July 14, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 2024 ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கிய 22 முக்கியமான வாக்குறுதிகளில், இதுவரை வெறும் ஒரு வாக்குறுதியே முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது என முன்னணி ஆய்வு நிறுவனம் வெரிட்டே ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுர மீட்டர் எனப்படும் இணைய கண்காணிப்பு முறையின் மூலம் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் படி, “உழைக்கும் போதே செலுத்தும் வரி” எனும் வாக்குறுதியே தற்போதைய வரையில் முற்றிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதி 21 வாக்குறுதிகளில் 35% மட்டுமே […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுமென பிரதி அமைச்சர் ரத்ன கமகே உறுதி

  • June 26, 2025
  • 0 Comments

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்திய இழுவைப் படகுகளால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் அதனால் ஏற்படும் சேதங்கள் குறித்து மீனவர் அமைப்பு பிரதிநிதிகள் கருத்துகளை முன்வைத்தனர். உரிமம் இன்றி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சுருக்கு மடி வலைகள் போன்ற தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் வெடிபொருட்கள், லைட் கோர்ஸ் மீன்பிடி முறைகள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழரசுக் கட்சி எம்.பி.ரவிகரன் தமிழரசுக் கட்சியின் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்

  • June 25, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளார். அந்த வகையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே ரவிகரன் பதவி விலகியுள்ளார். அதேவேளை ரவிகரன், தாம் கட்சிப் பதவிகளிலிருந்து விலகும் இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் […]

உள்ளூர்

யாழில் 10 சபைகள், வன்னியில் 4 சபைகளை சங்கு சைக்கிள் கூட்டணி கைப்பற்றும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  • June 7, 2025
  • 0 Comments

வடக்கில் கூட்டணியாக யாழ்ப்பாணத்தில் 10 சபைகளிலும், வன்னியில் 4 சபைகளிலும் ஆட்சியமைக்கமுடியும் என எதிர்பார்ப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய பேரவையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டிணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ராஜபக்ஸக்களை நிட்சயம் கம்பி எண்ண வைப்போமென அரசாங்கம் அறிவித்துள்ளது

  • June 6, 2025
  • 0 Comments

ராஜபக்ஸக்களை நிச்சயம் சிறையில் அடைப்போம் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான சுனில் ஹந்துனெத்தி இந்த விடயத்தை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். ராஜபக்ஸக்கள், ரணில் விக்ரமசிங்க போன்றோரை சிறையில் அடைப்போம் என்பதனை தெளிவாக கூறுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். சீனி வரி மோசடியின் போது தாமே அந்த முறைப்பாட்டை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை கைவிட மாட்டோம் எனவும் வழக்கை முன்னெடுத்துச்செல்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளைப்பூண்டு மோசடி, சதொச நிறுவனம் […]

உள்ளூர்

ஈ.பி.டி.பி யுடன் தமிழரசுக் கட்சி பேசியது தொடர்பில் எதுவும் தெரியாதென சிறிதரன் தெரிவிப்பு.

  • June 6, 2025
  • 0 Comments

உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த்தேசியக்கட்சிகளுடன் பேசுவதற்கே கட்சி தீர்மானித்திருந்ததாக சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், அவ்வாறிருக்கையில் தமிழ்த்தேசியத்துக்கு விரோதமான கட்சியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்தார். உள்ளுராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியும், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் நேற்று (05-06) சந்தித்துப் பேசியிருந்தனர் இவ்விருதரப்பு சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சாணக்கியன் எம்.பியின் தனிநபர் பிரேரணையான மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் சபையில் சமர்பிப்பு

  • June 5, 2025
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் தனிநபர் பிரேரணையாக மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் வழிமொழிந்தார். பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி கடந்த மே 22 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அந்த வர்த்தமானி அறிவித்தலில் 2017ஆம் ஆண்டில் செப்டம்பர் 21ஆம் திகதி வலுவிலிருந்த 1988 ஆம் […]

உள்ளூர்

தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்ததா என பரிசீலிக்கப்படும் – டக்ளஸ்

  • June 5, 2025
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன் சார்ந்து பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே டக்ளஸ் இதனைத் குறிப்பிட்டார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். அலுவலகத்துக்கு வருகை தந்த சிவஞானம், வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தமிழ் […]

உள்ளூர்

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

  • June 3, 2025
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர் கே.டி.எம்.யு. ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மின்சார சபையின் கடிதத் தலைப்பின் கீழ் இந்த நியமனம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் வலுசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆவார். இதற்கிடையில், இலங்கை மின்சார சபையின் தலைவராக இதுவரை பணியாற்றி வந்த பொறியியலாளர் கலாநிதி டி.ஜே.டி. சியம்பலாபிட்டியவின் ராஜினாமா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்>ஜனாதிபதி அநுரவுக்கு அவசர தந்தி அனுப்பிய டக்ளஸ்! […]

உள்ளூர்

ஜனாதிபதி அநுரவுக்கு அவசர தந்தி அனுப்பிய டக்ளஸ்!

  • June 3, 2025
  • 0 Comments

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் எமது கடல் வளத்தினையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இலங்கைக் கடற் பரப்புக்குள் எல்லை தாண்டியதும், சட்டவிரோதமானதுமான இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் தொழில் செயற்பாடுகள் காரணமாக எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களும், கடல் வளமும் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இத்தகைய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நாமும் பல்வேறு முயற்சிகளை […]