கூட்டமைப்பாக இருந்ததை விட தனியாக தமிழரசு கட்சி பலமடைந்துள்ளதாக சுமந்திரன் தெரிவிப்பு
இலங்கை தமிழரசுகட்சி பலவீனமடையவில்லை தமிழ்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- கடந்த தேர்தல்களிலே தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணை கிடைத்திருக்கவில்லை. 25வீத வாக்குகளை மாத்திரம் எங்கள் யாழ்;ப்பாணத்திலே பெற்றுவிட்டு தங்களிற்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது என அவர்கள் தெரிவித்தது தவறான கருத்து ஆனால் தனியொரு கட்சியாக 2018 இல் தமிழ்தேசிய கூட்டமைப்பாக நாங்கள் போட்டியிட்டு […]