உள்ளூர்

ஜனாதிபதியின் சிம்மாசன உரை மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது – சிறீதரன் எம்.பி

  • December 4, 2024
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சிம்மாசன உரையில் தமிழ் மக்களை தவிர்த்திருந்த நிலையில், அவர் நாட்டில் அடையாளம் தெரியாமல் போனதை நினைவுகூறுமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (3) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் தொடர்ந்து உரையாற்றிய சிவஞானம் சிறீதரன், 'ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில், 80 வருடங்களாக புரையோடியிருக்கின்ற இனப்பிரச்சினை தவிர்த்திருந்தது மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. யுத்தம் காரணமாக வாங்கிய கடன்கள் காரணமாகவே நாடு […]

உள்ளூர்

இனவாதத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்த இடமளியோம் – நலிந்த ஜயதிஸ்ஸ

  • December 3, 2024
  • 0 Comments

இனவாதத்தை எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள், சின்னங்கள், பதாகைகளை காட்சிப்படுத்துவதைத் தடைசெய்து 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அப்போதைய அரசாங்கம் வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. இனவாதத்தைத் தூண்டும் சம்பவங்கள் […]

உள்ளூர்

பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு உடனடி இடமாற்றம்.

  • December 3, 2024
  • 0 Comments

உடன் அமுலுக்கு வரும் வகையில் 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய 5 பிரதி பொலிஸ்மா அதிபர்கள்  35 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் , 7 பொலிஸ் அத்தியட்சகர்கள் , 7 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் , இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்இ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் , பிரதிப் பணிப்பாளராக இருந்த மகளிர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டபிள்யூ.ஐ.எஸ். […]

உள்ளூர்

தற்காலிக பாதுகாப்பு நிலையங்களில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆய்வு

  • December 2, 2024
  • 0 Comments

சாவகச்சேரியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து தீர்வு காண்பதற்காக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நேற்றைய தினம் (01.12.2024) பல்வேறு நிலையங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார். சாவகச்சேரியில் அமைந்துள்ள பாதுகாப்பு நிலையங்களுக்கு அரசாங்க அதிபர் சென்று அங்குள்ள மக்களுக்கான உணவு மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை கேட்றிந்து கொண்டார். மேலும் […]

உள்ளூர்

அந்தர் பெல்டி அடித்த செல்வம் அடைக்கலநாதன்

  • November 30, 2024
  • 0 Comments

மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசு அனுமதி வழங்கியமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என அநுரகுமார பற்றி தேர்தலில் பலி சுமத்திய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, இம்முறை ஒரு நிறைவான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனாதிபதிக்கும், தற்போதைய அரசிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளியேறும் குலசிங்கம் திலீபன்.

  • November 26, 2024
  • 0 Comments

முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும் அதன் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதவது, ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஆரம்பித்த எனது அரசியல் பயணம், பின்பு, 2013ம் ஆண்டிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உடன் இணைந்து கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்றினேன். […]

உள்ளூர்

மன்னார் மக்கள் வீதியை மறித்து போராட்டம்

  • November 25, 2024
  • 0 Comments

வெள்ள நீரை வெளியேற்ற கோரிதலைமன்னார் பிரதான வீதியில் உள்ள விலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டம்; நடத்தியுள்ளனர் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளுக்குடியிறுப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பாவிலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றக் கோரி நேற்று (24) மதியம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பாவிலுப்பட்டான் கிராமத்தில் 108 குடும்பங்கள் வசித்து வருகின்றாhர்கள் பாவிலுப்பட்டான கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை […]

உள்ளூர்

வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்த்தர் மரணம்

  • November 19, 2024
  • 0 Comments

வவுனியா – ஆண்டியாபுளியன்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 59 வயதுடைய குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார் மின்சார தாக்கியதையடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர்

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு பொலிஸார் உடந்தை

  • November 16, 2024
  • 0 Comments

கிளிநொச்சியின் பல பிரதேசங்களில்; சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ந்து இடம்பெறுகின்றது என கிளிநொச்சி வாழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர் சட்டவிரோத மணல் அகழ்வினால் பெறுமதியான வயல் நிலங்கள் உள்ளிட்ட தனியார் காணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளையர்கள் இரவு நேரங்களில் விவசாயம் செய்யும் மக்களுக்கு சொந்தமான காணிகளிலும் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்கள் கிளிநொச்சி பொலீஸாருடன் நல்ல உறவில் இருப்பதனால் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக பொலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொது மக்கள் குற்றம் […]

உள்ளூர்

நல்லை ஆதீன முதல்வரை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா.

  • November 12, 2024
  • 0 Comments

நல்லை ஆதீனத்துக்கு நேற்று(11)  காலை சென்ற டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்ததுடன் சுவாமிகளின் நலன்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார். அத்துடன் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்.     அதனை தொடர்ந்து, யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மரியாதையின் நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.   யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆயர் இல்லத்தில் இந்த […]