வவுனியாவில் மனைவியின் தாயின் வாயில் வெடி வைத்தார் மருமகன்
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இடியன் துவக்கு என அழைக்கப்படும் நாட்டு துப்பாக்கியுடன் மாமியின் வீட்டிற்கு சென்ற மருமகன் மாமியில் வாயில் துப்பாக்கியை வைத்து சுட்டுள்ளாhர். படுகாயமடைந்த 54 வயதுடைய பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாhர் சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியைசேர்ந்த 54 வயதான பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்


