இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாமென யாழ். பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாம் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவானது அண்மித்த காலப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இலங்கையின் கீழாகவும் இலங்கைக்கு அண்மித்ததாகவும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகள் பதிவாகி வருகின்றது. எனினும் இதுவரை இவை சேதங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் என்றோ ஒருநாள் இலங்கையிலும் […]