முக்கிய செய்திகள்

இளம் குடும்ப பெண்ணான 3 பிள்ளைகளின் தாய் தலைமறைவு பொலிஸார் வலைவீச்சு

  • February 17, 2025
  • 0 Comments

3 பிள்ளைகளின் தாய் 7 நாட்களாக வீட்டை விட்டுவெளியேறிய நிலையில், வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தாய் கடந்த திங்கட்கிழமை (10-02-2025 ) முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பெண் தொடர்பில் ஏதாவது அறிந்திருந்தால் உடனடியாக 0767824592, 0753251281 தொலைபேசி இலக்கங்களுக்கு […]

முக்கிய செய்திகள்

கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் தமிழ் கடத்தல்காரரான விக்னேஸ்வரமும் அவரது மனைவியும் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் 

  • February 16, 2025
  • 0 Comments

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் சந்தேகநபர் 30 வயதுடைய புஸ்பராஜ் விக்னேஸ்வரம் என்பவராவார். பல பொலிஸ் நிலையங்களால் விசாரிக்கப்பட்டு வரும் துப்பாக்கிசூட்டு முயற்சி, துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருத்தல் மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபராவார். சந்தேகநபர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு, இலங்கை காவல்துறையினரின் வேண்டுகோளுக்கு […]

முக்கிய செய்திகள்

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம் மீண்டும் இயங்குகின்றது

  • February 15, 2025
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09-02-2025) ஏற்பட்ட மின்தடையால் செயலிழந்த நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்று மின்பிறப்பாக்கி இயந்திரங்களும் திருத்தப்பட்டு மீண்டும் செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கமைய 3 இயந்திரங்களும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடையால், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்தன. இதன் விளைவாக, தேசிய மின்கட்டமைப்பில் 900 மெகாவாட் மின்சாரம் இழக்கப்பட்டது. நிலைமையை முகாமைத்துவம் […]

முக்கிய செய்திகள்

நாட்டில் இன்று பலவீனமான ஆட்சியே உள்ளதென்கிறார் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

  • February 15, 2025
  • 0 Comments

வலுவான அரசாங்கத்திற்கு பதிலாக, வரலாற்றில் மிகவும் தோன்றிய மிகவும் பலவீனமான அரசாங்கமே இங்கு காணப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று (14-02-2025 ) நடைபெற்ற கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கான செயலமர்வு மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் தொகுதி அமைப்பாளர் நியமணப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு என்பவற்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 10 பிரதான விடயங்களை […]

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் இரும்புக் கம்பியால் அடித்து குடும்பஸ்த்தர் கொலை செய்யப்பட்டுள்ளார்

  • February 15, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு, முள்ளியவளை முறிப்பு பகுதியில் குழுக்களுக்கிடையில் வியாழக்கிழமை (13-02-2025 ) இடம்பெற்ற கைக்கலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் ஒரு குழுவினர் இணைந்து குடும்பஸ்தர் ஒருவருடன் வாய்த்தர்க்கதில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் […]

முக்கிய செய்திகள்

வடமாகாணத்திற்கு இரவு தபால் தொடரூந்து சேவை இன்று தொடக்கம் ஆரம்பம்

  • February 14, 2025
  • 0 Comments

வடக்குக்கான இரவு தபால் தொடரூந்து; சேவை இன்று முதல் மொரட்டுவை தொடரூந்து; நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என தொடரூந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

தையிட்டி மக்கள்; மத்தியில் காணி அளவீட்டின் நோக்கம் தொடர்பான புரிதல் இன்மையே இன்று போராடவேண்டிய நிலையேற்பட்டதாக ஈபிடிபி தெரிவிப்பு

  • February 13, 2025
  • 0 Comments

தையிட்டி காணி அளவீடு செய்யப்படும் நோக்கம் தொடர்பில் எம்மவர்கள் சிலரிடம் காணப்பட்ட புரிதலின்மைiயால் தையிட்டி விகாரையை சூழவுள்ள தனியார் காணிகளை கடந்த அரசாங்க காலத்தில் விடுவிக்க முடியாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் போராட்டங்களூக்கும் கட்சின் பூரண ஓத்துழைப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் […]

முக்கிய செய்திகள்

அமெரிக்கா விலகுவதால் இலங்கைக்கு பின்னடைவு இல்லையென்கிறார்கள் சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார்

  • February 11, 2025
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவதால், இலங்கை தொடர்பான தீர்மானத்தில் பாரிய மாற்றங்களோ அல்லது பின்னடைவோ ஏற்படாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார், இருப்பினும் இலங்கை தொடர்பான தீர்மானத்தைத் தாம் நிராகரிப்பதை அமெரிக்கா விலகுவதைக் காரணங்காட்டி அரசாங்கம் நியாயப்படுத்தக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதன் உறுப்புரிமையிலிருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா வெளியேறுமெனத் […]

முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென நாமல் ராஜபக்ஸ வேண்டுகோள்

  • February 10, 2025
  • 0 Comments

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் விசாரணைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு விசாரணை சுருக்கமொன்றை நீதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதேவேளை சட்டத்துறை மீது அழுத்தங்களை பிரயோகிப்பதையும் அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். நேற்று (09-02-2025) ஞாயிற்றுக்கிழமை பொலன்னறுவை மாவட்டத்தில் கிராமத்துக்கு கிராமம் வேலைத்திட்டத்தை ஆரம்பித்த போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தமக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கிய […]

முக்கிய செய்திகள்

மாவையண்ணன் செத்த பின்னரும் அவரை கொலை செய்யும் சீவிகே. சிவஞானம்

  • February 7, 2025
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த அரசியல்குழுத் தலைவரும் மூத்த தலைவருமான மாவை.சோ.சேனாதிராஜாவின் குடும்பத்தவர்களிடத்தில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தருணத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்ட தச்சன்காடு இந்து மயானத்தில் தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் வடக்கு, கிழக்கு தமிழர்களின் சார்பில் ‘மாவையின் மரணத்திற்கு காரணமான […]