முக்கிய செய்திகள்

ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள் என பிள்ளையான் தெரிவித்துள்ளார்

  • February 6, 2025
  • 0 Comments

ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள் அவர்களிற்கு ஆயுதங்களை கைவிட்டவர்களிற்கும் முஸ்லீம் தீவிரவாதிகளின் நடவடிக்கைளிற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து பிள்ளையானின் முன்னாள் செயலாளர் ஆசாத் மௌலானா வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து டெய்லிமிரருக்கு பதில் அளிக்கையில் பிள்ளையான் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.   உயிர் அச்சுறுத்தல் என தெரிவித்து வெளிநாட்டில் நிரந்தரவதிவிடத்தை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஆசாத் மௌலானா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை […]

முக்கிய செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் மனைவிக்கு ஐநாவில் முக்கிய பதவி

  • February 6, 2025
  • 0 Comments

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மனைவியை அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தின் இலங்கைக்கான நிரந்திர வதிவிட அலுவலகத்தின் முதன்மை செயலாளராக நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்து. இதற்கான உத்தியோகபூர்வ நியமனத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மறைவுக்கு பின்னர் அமெரிக்காவில் வசித்து வரும் சொனாலி சமரசிங்கவுடன் குறித்த பதவி தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடியுள்ளது. இதனை ஏற்றுக்கொண்டுள்ள அவர் நியூயோர்க்கில் அமைந்துள்ள இலங்கையின் […]

முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டபயவை அரசாங்கம் கைதுசெய்யவுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

  • February 3, 2025
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸ மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே ஆகியோரை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அத்துடன் சுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சமடைந்துள்ள அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அசாத் மௌலானாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது நீக்கப்பட்டுள்ளது. […]

முக்கிய செய்திகள்

சிவபூமி திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

  • February 2, 2025
  • 0 Comments

சிவபூமி அறக்கட்டளையினரால், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம் இன்று (02) திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் கீரிமலை வீதியில் குறித்த திருக்குறள் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1,330 திருக்குறளும் கருங்கல்லில் கைகளால் செதுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, திருக்குறள் ஆராய்ச்சி நூலகம், தியான மண்டபம், ஆய்வாளர்கள் தங்கும் வசதிகள் என்பன அங்கு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது  

முக்கிய செய்திகள்

மறைந்த மாவை சேனாதிராஜாவுக்கு சுமந்திரன், அஞ்சலி செலுத்தினார்

  • February 1, 2025
  • 0 Comments

அமரர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார். கொழும்பிலிருந்து சுமந்திரன் யாழ் நோக்கி வரும் போது மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் இணைந்து வந்து மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.    

முக்கிய செய்திகள்

தண்ணியில் தண்ணீரில் பாய்ந்து காப்பாற்றப்பட்டவர் மீண்டும் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்

  • January 30, 2025
  • 0 Comments

மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை அங்கிருந்த இளைஞர்கள் காப்பாற்றி மீட்டு வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளனர் 33 வயதுடைய இளம் குடும்பஸ்த்தரான கணேசமூர்த்தி ரமேஸ் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன சம்பவம் கிளிநொச்சியில் பதிவானது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் நேற்று (29) ஆலயத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணேசமூர்த்தி ரமேஸ் பல மணி நேரம் மேலே வராத நிலையில், அப்பகுதி இளைஞர்கள் மீண்டும் காப்பாற்றும் நோக்கில் […]

முக்கிய செய்திகள்

சஜித் பிரேமதாச தலைமையில் வலுவான எதிர்க்கட்சி கட்டியெழுப்படுகின்றது

  • January 29, 2025
  • 0 Comments

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் இன்று கூடி கலந்துரையாடினர் பலமான எதிர்க்கட்சியை உருவாக்கி, மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் அனைவரையும் ஒன்று திரட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சக கட்சித் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் அரசாங்கத்தின் சரியான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது போலவே, நாட்டுக்கும் […]

முக்கிய செய்திகள்

ஜேவிபி அரசாங்கத்திற்கு கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் ஊடாக மக்கள் பாடம் புகட்ட ஆரம்பித்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

  • January 28, 2025
  • 0 Comments

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அரசு நிறைவேற்றாது இழுத்தடிப்பு செய்து வருவதாக எதிர்கட்சி தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார் மக்களுக்கு நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகளை வழங்கி விட்டு தற்போது அரசு திணறுகின்றது வலுவான வேலைத்திட்டமும் அதற்குத் தேவையான தொலைநோக்குப் பார்வையும் இந்த அரசாங்கத்திடம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். கம்பஹா, மாவட்டத்தில் இன்று (28) ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அநுரவின் […]

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் தூக்கிலிட்டு நாயை கொன்ற பெண் கைது

  • January 27, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பகுதியில் நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த சனிக்கிழமை (25-01-2025) நாயொன்று மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. நாய் கொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்ததுடன் அதற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் […]

முக்கிய செய்திகள்

கிளிநொச்சி கடலிலும் இந்திய மீனவர்களின் கடலழிப்பு தொடர்கின்றது

  • January 27, 2025
  • 0 Comments

கிளிநொச்சி இரணைதீவுக்கு அன்மித்த கடற்பகுதியில் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறையில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (26) நேற்று அதிகாலை 2 மணியளவில் இரணைதீவிற்கு அன்மித்த கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட மூன்று இந்திய இழுவைப்படகுகளையும் அதிலிருந்த 33 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர் இவ்வாறு கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்களும் கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் […]