உள்ளூர்

கடத்தி வரப்பட்ட பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது!

  • June 29, 2025
  • 0 Comments

இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கஞ்சா காரைநகர்ப் பகுதியில் கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வரப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான படகை கடற்படையினர் மறித்து சோதனையிட்ட போதே கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வந்த படகில் இருந்த மூவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளதோடு படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் ஊர்காவற்றுறைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகள் […]

உலகம்

ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்!

  • June 27, 2025
  • 0 Comments

  ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடும் சேதமடைந்ததுடன் குறிப்பாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப்பெரிய சவாலை […]

உள்ளூர்

யாழ் அச்சுவேலியில் கிணற்றில் கலர் மீன்களை பிடிக்க முயற்சித்த 10 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி

  • June 27, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, தோப்பு பகுதியில் 10 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று மாலை (26-06) இடம்பெற்றுள்ளது. பிரதீபன் தச்ஷன் (வயது 10) அரசடி, தோப்பு என்ற முகவரியைக் கொண்ட சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். தனது பேரனுடன் தோட்டத்துக்கு சென்ற சிறுவன், பேரன் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் பொழுது, கிணற்றில் கலர் மீன்களை பிடிக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாளியினை கிணற்றில் விட்ட பொழுது கயிற்றில் கால் சிக்குண்டு கிணற்றுக்குள் […]

உலகம்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் விண்வெளி வீரர்கள் சென்றுவிட்டனர்

  • June 26, 2025
  • 0 Comments

அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பியது. இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்{ சுக்லா விண்வெளிக்கு சென்றுள்ளார். இவருடன் 3 விண்வெளி வீரர்கள் சென்றுள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 6 […]

உள்ளூர்

மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்- ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

  • June 25, 2025
  • 0 Comments

நிலைமாறுகால நீதியை அடைந்துகொள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நினைவுகூரல் என்பன இன்றியமையாதனவாகும். அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளை உறுதிசெய்வதற்கும், அவர்களை ஆற்றுப்படுத்தவதற்கும் மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். மிக மோசமான குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உண்மை பொதுவில் ஏற்றுக்கொள்ளப்படாவிடின் அது பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நிலவும் தாக்கங்கள் மேலும் தீவிரமடைவதற்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு வலுவடைவதற்கும் வழிவகுக்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்தார். […]

உள்ளூர்

வடக்கிலே தமிழர்கள் வற்றிபோகின்றார்கள் என ஆறு திருமுருகன் கவலை வெளியிட்டுள்ளார்.

  • June 25, 2025
  • 0 Comments

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நிறுவுனர் நினைவு தானமும் பரிசளிப்பு விழாவும் நேற்று (24-06) நடைபெற்ற நிலையில் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கிய சந்தர்ப்பத்திலே அவர் அங்கு உரையாற்றினார். இன்று தேசியம், தமிழ்த் தேசியம் மற்றும் சுதேசியம் ஆகிய சொற்களெல்லாம் அரசியல்வாதிகளிடத்தே அடிக்கடி நடமாடினாலும் மகாஜனாக் கல்லூரி ஸ்தாபகர் பாவலர் துரையப்பா பிள்ளை அவர்கள் இந்த மண்ணிலே பிறந்த நாங்கள் ஏன் சுதேசியத்தைப் பாதுகாக்கக்கூடாது அதைப்பற்றி பேசக் கூடாது என்று அன்றே அடியெடுத்துக்கொடுத்தவர். அதனாலேயே அவரது சிலையின் பெயர்ப்பலகையில் […]

உள்ளூர்

இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை..!!!

  • June 25, 2025
  • 0 Comments

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது இனமேலாதிக்கம் மிகுந்திருக்கும் இலங்கைத் தீவில் சாத்தியமற்றது என்பதால், பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வகையிலான சர்வதேச விசாரணைக்கு வழிசெய்யுமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரியுள்ளார். இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருடனான சந்திப்பின் போதே […]

உள்ளூர்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளராக யாழ் மாநகரசபை உறுப்பினர் கபிலன் நியமனம்

  • June 14, 2025
  • 0 Comments

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளராக சுந்தரமூர்த்தி கபிலனுக்கான நியமனக் கடிதம் அமைச்சரால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், அமைச்சரின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்

உள்ளூர்

சுமந்திரனுக்கு செக் வைக்கும் கஜேந்திரகுமார்

  • June 6, 2025
  • 0 Comments

ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் தமிழ்தேசிய பேரவையும் கொள்கை ரீதியிலான ஒரு நிலைப்பாட்டிற்கு வந்திருக்கின்றன […]

உள்ளூர்

ஜனாதிபதியை சந்தித்த அவுஸ்திரேலிய துணைப் பிரதமர்!

  • June 3, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்புஅமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை பொருளாதார ரீதியில் நிலையான பயணத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஊழல் மற்றும் மோசடியை ஒழிக்க தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் […]