உள்ளூர் முக்கிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் அரசியல் பேரணியில் பங்கேற்க போவதில்லையென அருண் சித்தார்த்தின் தலைவர் தெரிவிப்பு

  • November 3, 2025
  • 0 Comments

எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் அவரது கட்சியினர் பங்கேற்கவில்லை. காரணமாக, எதிர்க்கட்சிகளுக்கு எந்த நிலையான கொள்கைத் திட்டமும் இல்லாததால், அவர்கள் 21 ஆம் திகதி ஒன்றிணைகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர சுட்டிக்காட்டியுள்ளார் கொழும்பில் நேற்று (02-11) நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசு கொள்கைகளை எதிர்க்கும் நிலைப்பாட்டில் அவர்கள் இல்லாமல் இருப்பதையும், சிறந்த திட்டங்களுக்கு நிபந்தனையில்லாமல் ஒத்துழைப்பை வழங்கப்போகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். திலித் ஜயவீரின் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாதாள உலக கோஷ்டி கொழும்புக்கு இழுத்துவரப்பட்டனர்

  • August 30, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக கோஷ்டி இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவரகள்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுவட்டாரத்தில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

உள்ளூர்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலிருந் மீட்கப்பட்ட பொருட்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை

  • August 30, 2025
  • 0 Comments

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் அகழ்வாராய்ச்சியின் போது, துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்பு காயங்களால் உயிரிழந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் எலும்புகள் மீட்கப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவின்படி புதைகுழி மூடப்பட்ட நிலையில், அங்கிருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்த யாரும் இதுவரை முன்வரவில்லை. இலங்கையின் ஆறாவது பெரிய மனித புதைகுழியாகக் கருதப்படும் கொக்குத்தொடுவாய் வழக்கு, முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு […]

உள்ளூர்

யாழ் செம்மணியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன

  • August 29, 2025
  • 0 Comments

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் இதுவரை மொத்தம் 187 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 174 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 37வது நாளாக தொடர்ந்தன. இந்த பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.

உள்ளூர்

எதிர்க்கட்சியினரின் AKD கோ கோம் போராட்டம் நேற்று ஆரம்பம்

  • August 27, 2025
  • 0 Comments

கொழும்பில் எதிர்க்கட்சி நடத்திய போராட்டத்தில் ஒருவர் பொலிஸ் அதிகாரி காயமடைந்தார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகம் அருகே நேற்று (26-08) பிற்பகல் பெரிய மக்கள் கூட்டம் திரண்டது. இதனால் அப்பகுதியில் பல சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ‘ஒடுக்குமுறைக்கு எதிராக’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக சிறையில் வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அரசின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இந்நாள் பிரதமர் முன்னாள் ஜனாதிபதியை பார்க்கவில்லை.

  • August 26, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்த்ரீ விக்ரமசிங்க உடன் நேற்று (25-08) அதிகாலை நேரத்தில் சந்தித்ததாக பரவிய செய்திகளை பிரதமரின் அலுவலகம் முற்றிலும் மறுத்துள்ளது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

நிதி மோசடியில் குற்றவாளியொருவர் அநுர அரசில் அமைச்சராய் இருப்பது பாரிய பிரச்சினை- புபுது ஜயகொட

  • August 19, 2025
  • 0 Comments

நிதி மோசடியில் குற்றவாளியாக்கப்பட்ட ஒருவரை நாட்டின் பிரதான அமைச்சரவை அமைச்சராக நியமித்திருப்பது பாரிய பிரச்சினை என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். கொழும்பில் நேற்று (18-08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை எதிர்த்து, அவர் உர கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன என அவர் சுட்டிக்காட்டினார். 80 இலட்சம் […]

உள்ளூர்

சோமரத்ன ராஜபக்ஸவின் உயிருக்கு ஆபத்தென்கிறார் அவரது சகோதரி ரோஹினி ராஜபக்ஸ

  • August 6, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதில் சாட்சியம் அளிக்கத் தயாராக இருப்பதாக, கிருஸாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபகஸ் தெரிவித்துள்ளார். இதனை அவரது மனைவி எஸ்.சி. விஜேவிக்ரம, ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.   அக்கடிதத்தில், யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட சித்திரவதைக்கூடங்கள் […]

உள்ளூர்

பாதுகாப்பு பிரதியமைச்சராக இராணுவ அதிகாரி இருப்பதானது ஈஸ்ட்டர் தாக்குதல் விசாரணைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்- அருட்தந்தை சிறில் காமினி

  • July 29, 2025
  • 0 Comments

பாதுகாப்பு பிரதியமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர பதவிவகிப்பது 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் நம்பகதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் அரசாங்கம் பொருத்தமான தீர்மானமொன்றை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் இராணுவ அதிகாரி பாதுகாப்பு பிரதியமைச்சராக பதவிவகிப்பது விசாரணைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என கத்தோலிக்க திருச்சபையும் கருதுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். ‘ […]

உள்ளூர்

‘நேற்று – இன்று – நாளை’ எனும் தொனிப்பொருளில் கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு நடைப்பபெற்றது

  • July 28, 2025
  • 0 Comments

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ஒரு வார காலம் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைத் தாக்குதல்களில் பலியான உறவுகளின் நினைவாக யாழ்ப்பாணத்தில் நேற்று இக்கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தலைமையில் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பம், சிவஞானம் சிறிதரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செ.கஜேந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சட்டத்தரணி ப.குகனேஸ்வரன், சமூக அரசியல் செயற்பாட்டாளர் சி.சிவமோகன் என பலர் […]