இன்ரர்போலால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இருவர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர்
இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு இந்தியாவிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாகயிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இன்று கொண்டுவரப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொலை, துப்பாக்கிச் சூடு மற்றும் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த இருவரே இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ‘இரத்நாயக்க வீரகோன் அரோஸன் மதுஸங்க’ என்பவரும் மொரட்டுவை […]