கொள்கலன்கள் விடுவிப்பில் மோசடி இடம்பெறவில்லையென்கிறார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களும் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்கள் உரிய சாட்சியங்களுடன் அது தொடர்பில் முறைப்பாடு செய்ய வேண்டுமே தவிர குற்றச்சாட்டுக்களை சுமத்துவதில் பயனில்லையென்கிறார் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களும் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் சுங்கத்திணைக்களமும் தெளிவுப்படுத்தியுள்ளது. சுங்கத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் […]