சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரை சந்தித்த இந்திய துணைதூதுவர் !
யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரை யாழ் இந்திய துணைதூதுவர் சாய் முரளி இன்றைய தினம் சந்தித்து கலந்துரையாடினார். இதன் பொழுது மீனவர்கள் தமது வாழ்வாதர பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதோடு தொடர்ச்சியாக குறித்த கடற்றொழிலாளர்கள் மீன் பிடியில் ஈடுபடும் கடற்கரைக்கு தூதுவர் சென்றார். தொடர்ந்து அங்கு இழுவை மடிகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் நிலை குறித்தும் மீனவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார். இதேவேளை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளால் யாழ் இந்திய துணைதூதுவருக்கு மகஜர் […]