உள்ளூர்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

  • December 17, 2024
  • 0 Comments

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் கொந்தளிப்பு நிலையானது தொடர்ந்தும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையானது மேலும் வலுவடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு திசையில் நகரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை […]

உள்ளூர்

தமிழரசு கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவர்கள் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு.

  • December 15, 2024
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவதுடன், சிலர் இடைநிறுத்தப்படுவர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்று தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதனை பொதுச்செயலாளர் எதிர் வரும் […]

உள்ளூர்

புதிய சபாநாயகர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரை!

  • December 15, 2024
  • 0 Comments

சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆராச்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சபாநாயகர் அசோக ரன்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் தொடர்பாக கடந்த சில நாட்களாக நாட்டில் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த 13 ஆம் திகதி பிற்பகல் அசோக ரன்வல, சபாநாயகர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார். […]

உள்ளூர்

கிளிநொச்சி பளையில் வைரவர் கோயில் கதவு விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்டுள்ளது.

  • December 9, 2024
  • 0 Comments

கடந்த 7ஆம் திகதி விஷமிகள் மடப்பள்ளி கூரை வழியாக ஆலயத்தினுள்ளே இறங்கி ஆலயக் கதவினை கொத்தி தீ வைத்து எரித்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஒழுங்கீனமாக செயற்படும் விஷமிகளுக்கு எதிராக பளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் ஆலயத்துக்கு சென்று பார்வையிட்டதோடு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலயத்தின் கதவினை எரித்த விஷமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆலய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கடந்த ஆனி மாதம் இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்தமை […]

உள்ளூர்

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 3 ஆயிரம் வாக்குகளால் தப்பி பிழைத்த ரெலோவின் கலந்துரையாடல்!

  • December 7, 2024
  • 0 Comments

வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினமும் கலந்துக்கொள்வதாக தெரியவருகின்றது அத்துடன் ரணில் ஆதரவு அணி வினோநோகராதலிங்கமும் கலந்துக்கொண்டுள்ளாராம் டெலோவின் கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத ;தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில்இடம்பெற்றுவருகின்றது. ரெலோ தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்டநகர்வு மற்றும், சமகாலஅரசியல் நிலவரங்கள், தொடர்பாக பேசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது கலந்துரையாடலில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரன், மற்றும் விந்தன்கனகரத்தினம்,பிரசன்னா இந்திரகுமார்,செ.மயூரன் , பேச்சாளர் சுரேன் […]

உள்ளூர்

மாவீரர்களை மாவீரர்கள் என பாராளுமன்றத்தில் சொல்லப்பயந்த எம்.பி.

  • December 7, 2024
  • 0 Comments

இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் என மேதகுவிற்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எங்கே? மாவீரர்களை இறந்தவர்கள் என விழித்த பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் எங்கே? ஆனால் இருவரும் வைத்தியர்களே.   இதையும் படியுங்கள்>நீண்ட காலமாக யாழ் பொலிஸாருக்கு ஆட்டம் காட்டியவர் கைது https://www.youtube.com/watch?v=I9vE6Q6IR08

உள்ளூர்

ஜனாதிபதியின் சிம்மாசன உரை மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது – சிறீதரன் எம்.பி

  • December 4, 2024
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சிம்மாசன உரையில் தமிழ் மக்களை தவிர்த்திருந்த நிலையில், அவர் நாட்டில் அடையாளம் தெரியாமல் போனதை நினைவுகூறுமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (3) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் தொடர்ந்து உரையாற்றிய சிவஞானம் சிறீதரன், 'ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில், 80 வருடங்களாக புரையோடியிருக்கின்ற இனப்பிரச்சினை தவிர்த்திருந்தது மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. யுத்தம் காரணமாக வாங்கிய கடன்கள் காரணமாகவே நாடு […]

உள்ளூர்

இனவாதத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்த இடமளியோம் – நலிந்த ஜயதிஸ்ஸ

  • December 3, 2024
  • 0 Comments

இனவாதத்தை எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள், சின்னங்கள், பதாகைகளை காட்சிப்படுத்துவதைத் தடைசெய்து 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அப்போதைய அரசாங்கம் வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. இனவாதத்தைத் தூண்டும் சம்பவங்கள் […]

உள்ளூர்

பாராளுமன்றில் வைத்து தாக்குதலுக்கு இலக்கான இராமநாதன் அர்ச்சுனா!

  • December 3, 2024
  • 0 Comments

பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர் தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தனக்கான நேர ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசாரிக்க சென்ற போது இவ்வாறு தன்னை தாக்கியதாக அவர் முறையிட்டுள்ளார். ‘ இன்று 2.30 மணியளவில் நான் எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்குச் சென்றேன் இதன்போது நான் கேட்டேன் இந்த நேர ஒதுக்கீடு […]

உள்ளூர்

பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு உடனடி இடமாற்றம்.

  • December 3, 2024
  • 0 Comments

உடன் அமுலுக்கு வரும் வகையில் 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய 5 பிரதி பொலிஸ்மா அதிபர்கள்  35 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் , 7 பொலிஸ் அத்தியட்சகர்கள் , 7 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் , இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்இ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் , பிரதிப் பணிப்பாளராக இருந்த மகளிர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டபிள்யூ.ஐ.எஸ். […]